பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

213

அடிகள் புன்முறுவல் பூத்தார். "அப்படியா? இதில் குற்றம் பிராமணர் மீதுதான் இருக்கிறது என்று எண்ணுகிறேன். உண்மையான பிராமணர் கடமை, ஆங்கிலம் படித்து அயலாட்சிகளில் அடிமைத் தொழில் புரிவதன்று.பிராமணருக்கு வகுக்கப்பட்டகடமை அதுவன்று. அவர்கள் சமஸ்கிருதமும் வேத சாத்திரங்களும் படித்து வேள்வி வழிபாடுகளில் கருத்துச் செலுத்தி மக்களுக்குச் சமயத் தலைமை கொள்ள வேண்டியது தான் முறை. அதைத் தென்னகப் பிராமணர் பின்பற்றினால், அவர்கள் தருமமும் சிறக்கும், சிக்கலும் தீரும்” என்றார் அவர்.

அடிகள் விளக்கம், தமிழகப் பிராமணரையும் மராத்தியப் பிராமணரையும் ஒருங்கே நெஞ்சில் அடித்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், தமிழகப் பிராமணர் வெறும் அரசியல் வகுப்பு மட்டுமல்ல; திராவிடப் பண்பில் ஊறிய வகுப்பு.

கவே அவர்கள் கண்டித்தனர், கிளர்ச்சி செய்தனர். அவர்கள் பெரியார் வழிதான் பின்பற்றினர். கோட்சே வழி பின்பற்றவில்லை. கோட்சே செயலுக்குத் தூண்டுதல் மட்டும் தம்மையறியாமலே அவர்கள் மேற்கொள்ள நேர்ந்தது. ஆனால், வடதிசையில் பொதுவாக, மராத்தி நாட்டில் சிறப்பாக ஏற்பட்ட நிலை இதுவல்ல. அங்கே பிராமணர் தமிழகப் பிராமணர்போல ஆட்சி வகுப்பினரல்ல, ஆட்சி வகுப்புடன் போராடி அதை முற்றிலும் அழிக்க முயன்றும் முழுதும் முடியாமல் அவதிப்பட்ட பேஷ்வா மரபு அது. தமிழகப் பிராமணர் 'கூற’த் தயங்கியதை அது கோட்சே உருவில் ‘செய்ய'த் துணிந்தது!

இந் நிகழ்ச்சிக்கு மூல முதலான நிகழ்ச்சி இவ்வளவு கோர முடிவுக்குரியதன்று. தென்னகப் பிராமணர், தமிழகப் பிராமணர் ஒருபோதும் இம் முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறலாம். ஆனால், மூல நிகழ்ச்சி தென்னகப் பிராமணர் பிரச்சனை - தூண்டிய உணர்ச்சியும் அதுவேயாகும்.

தென்னகப் பிராமணர் சென்ற தவறான பாதையையும், திராவிடப் பண்பும், திராவிட இயக்கமும் அவர்களுக்குக் காட்டி வரும் சீரிய ஒளி விளக்கத்தையும் இது நயம்படக் காட்டுவதாகும். இம் மூல நிகழ்ச்சிக்கு ஒளிகாட்டும் மூலக்கரு முதல் நிகழ்ச்சி

ஒன்று உண்டு.