பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

217

தேசியமாக, கீழ் திசையில் மறுமலர்ச்சி தூண்ட வல்ல தேசியக் கூட்டுறவாக இயங்க முடியாது.

இன வேற்றுமை, இன வேறுபாடு, இன வாழ்வு இவை மூன்றையும் இந்நாட்டுப் பொதுமக்களிடையே பலர் தெரிந்தோ தெரியாமலோ குழப்புகின்றனர். இனம் என்ற சொல்லின் பல தளத்திலுள்ள பொருள்களிலும் இதுபோன்ற குளறுபடி உண்டு பண்ணுகின்றனர்.

இன வேற்றுமை என்பது ஓரினத்துக்கு ஒரு நீதி, மற்றோர் இனத்துக்கு மற்றொரு நீதி, ஓரினத்துக்கு உரிமை, மற்றோரினத்துக்குக் கடமை என்ற அடிப்படையில் ஒருங்கு வாழும் தேசியம் அமைப்பதேயாகும். இன வேறுபாடு இதுவன்று இனத்துக்கு இனம் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் ஆகியவற்றில் வேறுபாடு இருக்கலாம். இருப்பது இயல்பு. வற்றை வலிந்து ஒற்றுமைப் படுத்துவது, அதாவது ஒருமைப் படுத்துவது என்பது உண்மையில் ஓரின ஆதிக்கமாகவும் இன வேற்றுமையாகவுமே முடியும். எல்லா இனங்களும் சரிசம உரிமை பெற்று, அன்புப் பாசம், அறிவுடன் கூடிய விட்டுக் கொடுப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் வேறுபாட்டில் ஒற்றுமை வளர்ப்பதே இன வேறுபாடு ஆகும். இதுவே பல இனங்களாக வாழ்ந்த குழுக்களை இயற்கையின் சூழலில் ஒரே தேசிய இனமாக உருவாக்க உதவும். இவ்வாறு ஓரின அடிப்படையிலும் சரி, பல இன அடிப்படையிலும் சரி, வேறு பாட்டடிப்படையில் கூட்டமைப்பாக அமைபவையே பெரும்பாலான நாகரிக தேசிய இனங்கள். பண்பில் இவ்வாறு உருவாகாத இனக் கூட்டுகள் மதம், மொழி, வாழும் இடம் ஆகியவற்றால் ஒரு திசைப்பட்டு ஓரினம்போலக் காட்சியளிக்கலாம், ஓரினம் என்று கூறப் படலாம். ஆனால், அவை தேசிய இனங்கள் ஆகமாட்டா.

ஐரோப்பாக் கண்டம் ஒரே நில இயல் பரப்பாகவும் கிட்டத் தட்ட ஒரே நாகரிகமும், ஒரே சமயமும் பழக்க வழக்கமும் உடையதாகவுமே நிலவுகிறது. ஆயினும் அது ஒரே தேசிய இனமல்ல, பல இனக் கூட்டாகக்கூட ஒருங்கு கூடி வாழ முடிய வில்லை. அதுபோலவே இஸ்லாமிய உலகு ஆற்றல் வாய்ந்த ஒரு தனிப் பெருஞ் சமயத்தாலும் அதன் கட்டுப்பாட்டாலும் ஒன்று பட்டிருந்தாலும்கூட, அராபியர், துருக்கியர், பாரசிகர்,