பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(218

அப்பாத்துரையம் 11

நீக்ரோக்கள், ஆரியர், திராவிடர் ஆகிய பலதர நாகரிகமுள்ள இனங்களை ஒரே இனமாகப் பொருத்திவிட முடியவில்லை.

வை தனித் தனி இனமாக வாழ முடியும். திராவிட இனப் பண்பாடு பின்பற்றிய கூட்டினமாக ஒரே தேசிய இனமாகக்கூட முடியாதென்றில்லை. ஆனால், கூட்டு வாழ்வுக்குரிய ஒரே அடிப்படை இன வேறுபாடும் சமத்துவமும் உடைய ஒத்துழைப் படிப்படையேயாகும். உயர்வு தாழ்வு அடிப்படையிலோ ஓரின ஆதிக்க அடிப்படையிலோ அமையும் வலுக்கட்டாயமான ஒற்றுமை ஆதிக்க ஒற்றுமை, அது கூட்டமைப்புக்கு உரியதன்று.

மேலை நாடுகள் நாகரிகத்தில் மேலோங்கியிருப்பதன் காரணம் அவை தனித்தனி இனங்களாகவோ, இன்றியமையா இ ங்களில் சரிசம உரிமையுடைய நாட்டின் அமைப்புக் களாகவோ குடியாட்சிப் பண்புடன் இயங்குவதுதான். ஸ்விட்சர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், சோவியத்து ருசியா ஆகிய கூட்டமைப்புக்கள் பல வேறுபடிகளில் இக் கூட்டமைப்பு முறையில் வெற்றி பெற்று வருகின்றன. ஆனால், இவற்றில்கூட மிகவும் வேறுபட்ட சில தனி இனங்களை முற்றிலும் கூட்டமைப்பில் எளிதில் இணைக்க முடியாமல் இன்னல்கள் எழுகின்றன. அமெரிக்காவில் நீக்ரோப்

க்

பிரச்சினையும் ஆப்பிரிக்காவில் ஆசிய மக்கள் பிரச்சனையும் இத்தகையனவே. ஆப்பிரிக்காவில் நீக்ரோக்கள், மலாயாவில் மலாய் மக்கள் ஆகிய துரதிருட்டம் வாய்ந்த இனங்களோ, ஏறத்தாழத் தமிழகத்தில் தமிழர், திராவிடத்தில் திராவிடர் நிலை யிலேயே திராவிட இயக்கம் போன்ற இன உரிமை இயக்கம் கூட இல்லாத நிலையிலேயே உள்ளன.

ஆரியர் வரும்வரை திராவிட நாகரிகம் மேலோங்கி இருந்ததற்கான காரணம், திராவிடர் தனி இன வாழ்வு வாழ்ந்தது மட்டுமன்று. பிற இனங்களுடன் கூடி வாழ நேரும் சமயங்களில் கூட, திராவிடர் பின்பற்றிய பண்பு இன்றைய ஐரோப்பிய நாகரிகம் பின்பற்றும் பண்பாய் இருந்தது என்பதே. அவர்கள் இயல்பான குடியாட்சிப் பண்பு வலிந்த ஒற்றுமை நாடாமல் இனவேறுபாட்டடிப்படையில், சரிசம உரிமையுடன் அவ்வினங்களுக்கு விட்டுக்கொடுத்து, பண்பொற்றுமை நாடி வந்தது. அவர்கள் ஒருமை நாடவில்லை. ஆனால், ஆரியர்