பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24. இனம் என்ற சொல்லின் ஆக்கப் பொருள், அழிவுப் பொருள்

திராவிட நாட்டுப் பிரிவினை இன அடிப்படையாகத் தேசிய இனம் வளர்த்து உலக இனம் நோக்கி வளர இருக்கும் ஒரு மாபேரியக்கத்தின் குரல்.அது இனம் பேசி, இன வேறுபாடுவளர்த்து, உயர்வு தாழ்வும் ஆதிக்கமும் பேணி, உலகில் வேற்றுமைகள் நெருங்கி வரும் ஆரியரின் இனப்பெயர் கூறா இன ஆதிக்கக் கிளர்ச்சியன்று. இனம் என்ற சொல்லை ஆரியச் சார்பாளர்,பாரத தேசியச் சார்பாளர் பயன்படுத்தலாம்,பயன்படுத்தாமல் இருக்கலாம்.ஆனால்,திராவிடர் பயன்படுத்தும் ‘இனம்' என்ற சொல்லின் பொருளும் பண்பும் வேறு. அவர்கள் பயன்படுத்தும் 'இனம்' என்ற சொல், அல்லது மனத்தில் கொள்ளும் ‘இனம்' என்ற சொல்லின் பொருளும், பண்பும் வேறு. அவ் வேறுபாடு 'காமம்','காதல்' என்ற சொற்களின் வேறுபாடும், ‘மாடு’ ‘பசு’ என்ற சொற்களின் வேறுபாடும் போன்றது. ஆரியர் பயன்படுத்தும் ‘இனம்' என்ற சொல் 'காமம்' ‘மாடு' போன்றது.அது சொல்லத் தகாத, கீழ்த்தர உணர்ச்சியுடைய சொல். பண்புடையவர் களிடையே மதிப்புப் பெற முடியாத சொல். அவர்கள் அச்சொல்லை மறைப்பதற்கும் ஏளனமாகப் பயன்படுத்துவதற்கும் காரணம் அதுவே. ஆனால், திராவிடர் அதே சொல்லை அதன் உயிர்ப் பொருளில், நாகரிக வளர்ச்சிக்குரிய ஆக்கப் பொருளில், 'காதல்' ‘பசு' என்ப வற்றைப் போல, மறைக்காது, கூசாது வழங்குகின்றனர்.

மாடு முரட்டுத்தனம் உடையது. பசு அமைதியுடையது.காமம் குடும்பம் கெடுப்பது. காதல் குடும்பம் வளர்ப்பது. இது போலவே ஆரியர் பேணும் 'இனம்', இனப் பண்பு, மனித வாழ்வு-கெடுப்பது. திராவிடர் பேணும் 'இனம்' - இனப்பண்பை மனித வாழ்வை வளப்படுத்துவது. தேசிய இனம், மனித இனம், உலகம் ஓரினம் என்று நாம் கூறும்போது, 'இனம்' என்ற சொல்லைத் திராவிடர் 'இனம்' என்று குறிப்பது போன்ற அறிவார்ந்த, ஆக்கப் பொருளி லேயே வழங்குகிறோம்.