பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(226

அப்பாத்துரையம் 11

இன வாழை, இன மலர் என்ற வழக்குகளில் அது இன நலமுடைய என்ற பொருளும், இனப் பரப்பு அல்லது நீடித்த இனப் பயிற்சியின் ஆக்கமுடைய என்ற பொருளும் தருகிறது. ஆனால், ஆரிய வழக்கிலோ ‘இனம்' என்ற இதே சொல் படிப்படியாக ஆரிய நாகரிகம் அடைந்து வந்த பிற்போக்கு, பிளவு, உயர்வு தாழ்வு மனப்பான்மைகளையெல்லாம் குறிக்கிறது. தமிழில் ‘கீழினம்' என்றால் பண்பில் இழிந்தவர் என்று மட்டும்தான் பொருள். ஆரிய வழக்கில் அது பிறப்பில் கீழ்ப்பட்ட என்ற, தமிழன் உள்ளத்திலேயே இல்லாத ஒரு பண்பைத் தமிழனிடமே புகுத்திவிட முயல்கிறது.

ஆரியரும் அவர் சார்பில் இருந்து தமிழ்ப் பண்புணராத வரும் கூறும் பொருளில் இன வேறுபாடோ, வேற்றுமையோ எதுவும் திராவிடர் கனவில் கூடக் கிடையாது. திராவிட இனம் என்பது பிறப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்ட இனமன்று. பிறப் புடன் பண்பு சேர்ந்த இனத்தையே அது குறிக்கும். அப் பண்பு பிறப்புக் கடந்து செல்வதாதலால் திராவிடராகப் பிறவாத வரையும் அது அப் பண்பில் இழையவிட்டு, தம் பண்பாட்டில் அவர் களையும் அவர்கள் விரும்பினால், விரும்பிய அளவில் சேர்த்துக்கொள்ளும் தன்மையுடையது. ஆனால், திராவிடருடன்

ணைய விரும்புபவர்கள் திராவிடர் உரிமையையே கெடுப்பவராக இருத்தலாகாது. திராவிடப் பண்பு ஆரியர் வரவால், அவர்கள் பண்பாட்டின் கலப்பால் கேடடைந்த வகை இதுதான். பெருந்தன்மையுடன் இனவேறுபாடு காட்டாது தன்மை ஏற்று ஆதரவு தந்த தமிழன் உரிமையையே கெடுக்க முற்பட்ட ஒரே இனம் ஆரிய இனம். தமிழினத்தவராகிய தெலுங்கர், கன்னடியர், அயலினத்தவராகிய மராட்டியர், வங்காளியர், தொலை இனத்தவராகிய அராபியர், யூதர் - எவரும் தமிழருடன் கலக்கும்போது தமிழன் உரிமையை, தமிழ்மொழி உரிமையைச் சூறையாட எண்ணிய தில்லை. அதில் அவர்கள் அக்கறை காட்டவுமில்லை. ஆனால், ஆரியரும் ஆரிய மயமான பிற இனத்தவரும் ஆரிய மயமான நிலையில் மராத்தியரும், வங்காளியரும் - தெலுங்கரும், மலையாளிகளும்கூடத் தமிழர் உரிமைகளைக் கெடுக்க முற்படுகின்றனர். அதுமட்டுமோ! ஆரிய மயமாய்விட்ட தமிழர் தமிழரையும், தெலுங்கர் தெலுங்கரையும் உரிமை கெடுத்துத் தாழ்த்தத் தயங்கவில்லை. உண்மையில் ஆரிய