பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

237

நாட்டுப்புற ஆசிரியர் பற்றி அவர் வருணிக்கிறார்; (And though defeated, he would argue still) ஆனால், அங்கே ஆசிரியர், ஊரில் தன்மதிப்புப் பேணும் பழம் பாணியிலேயே அவ்வாறு செய்கிறார். இங்கே நோக்கம் இதுவன்று. ‘திராவிட இயக்கம் படித்தவரையும் ஆட்கொண்டுவிட்டது; படியாதவரையும் ஆட்கொண்டுவிட்டது. ஆகவே அரைகுறைப் படிப்பினால் குழம்புபவரையாவது சற்றுக் குட்டை குழப்புவோம்' என்ற எண்ணமே இவ்விடாக் கேள்விகளுக்குரிய காரணமாகும். ஆனாலும் இக்கேள்விகள் தாம் திராவிட இயக்கத்தை முழுநிறை அளவில் ஆழ்ந்து வேரூன்றிய ஒரு தேசிய இயக்கமாக்கி வருபவை? ஏனென்றால் கேள்வி கேட்பவர் உள்ளத்திலேயே, தடுமாற்றத் திலேயே திராவிடம் புகுந்து கொண்டிருக்கிறது! விடை விளக் கங்கள் திராவிட இயக்கத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒரு காலங்கடந்த இயக்கமாக, தேசங்கடந்த புகழ் மரபாக, மனித இனத்தையே வாழ்வித்து வாழும் தகுதியுடைய பண்பாக மாற்றி விடும் என்பதில் ஐயமில்லை.

திராவிடம் என்ன மொழிச் சொல்? என்ன மொழிச் சொல்லானால் என்ன, அப்பனே!

காங்கிரஸ், சோஷலிஸ்ட், கம்யூனிசம் என்ன மொழிச்சொல் என்று கேட்டாயா? இந்தியா, இந்து மதம் என்ன மொழிச் சொல் என்று எந்த அகராதியையாவது - தமிழ், தெலுங்கு சமஸ்கிருதம், இந்தி - எந்த மொழி அகராதியையாவது எடுத்துப் பார்த்தாயா, தம்பி! உன் பெயர், உன் தாய் தந்தையர், அண்ணன் தம்பி, அக்காள் தங்கையர் பெயர்கள் என்ன மொழிச் சொற்கள் என்று எண்ணிப் பார்த்ததுண்டா? நம் நாட்டுத் தலைவர், நம் தமிழ்க் கவிஞர், தமிழ்ப் புலவர் பெயர்களில் கூட எத்தனை பெயர்களில் தமிழ் இடம் பெற்றிருக்கும்? இவற்றை யெல்லாம் கேட்கக் கருதாதவர்கள் நாவில், 'திராவிடம் என்ன மொழிச் சொல்?' என்ற கேள்வி எழுகிற தென்றால், அதுவே திராவிட இயக்கத்தின் மாபெரு வெற்றிக்கு ஒரு சான்றாயிற்றே!

திராவிட இயக்கம் வளம் பெற்றோங்கியுள்ள இந்தத் தலைமுறை யிலன்றி, முந்திய அடிமைத் தலைமுறைகளில் இக்கேள்வியை எவரே கேட்டிருக்கக் கூடும்? எவருக்குத்தான் கேட்கத் தோன்றி யிருக்கும்?