பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

239

தமிழ் தனித்தியங்கவல்லது என்பதை முதன் முதல் நிலை நாட்டிய பேரறிஞர் - சைவ உலகெங்கும் சமய உலகெங்கும் பெரும்புகழ் நிறுவிய, சுவாமி வேதாசலம் என்னும் தம் பெயரையே மாற்றி 'மறைமலையடிகள்' என்று புதுவழக்கு ஏற்படுத்தி அதையும் இன்று நாடறியச் செய்துவிட்ட, தமிழறியச் செய்து விட்ட பெரியார் -நூற்றுக்கணக்கான தம் ஏடுகளிலும் சொற்பொழிவுகளிலும் ஒரு சமஸ்கிருதச் சொல் கூட வராமல் பேசிய, எழுதிய தனித்தமிழ்த் தறுகணாளர் - அவர் கேட்க வில்லை, திராவிடம் எம்மொழிச் சொல்லென்று அவர் வழங்கிய சொல்லே அது!

-

'ஆசிரியர் மறைமலையடிகளாரும் அவர் காலத்தவரும் திராவிடம்' சமஸ்கிருதச் சொல் என்றுதான் கருதினார்கள். ஆனால், அது 'தமிழ்' என்பதன் சமஸ்கிருதத் திரிபு என்று அவர்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால், அந்த வடிவில்கூடத் தூய தனித்தமிழ்க் களிறாகிய அவர் அம் முறையில் அதைப் பயன்படுத்தியிருக்க மாட்டார். 'தனித் தமிழ்' என்பதற்கு, திராவிடத் தமிழ் என்பதுதான் பொருள் என்பது கருதியே அவர் அச்சொல்லை மட்டும் - அந்த ஒரே சமஸ்கிருதத் திரிபு வழக்குச் சொல்லைமட்டும் - வழங்க ஒருப்பட்டார். ‘தனித் தமிழ்’ என்ற தொடரில் ‘தனி' என்பதற்கு என்ன பொருள் என்று யாராவது அவரிடம் கேட்டிருந்தால், அவர் என்ன சொல்லியிருப்பார்? 'திராவிடத் தமிழ்' என்றுதான் கூறியிருப்பார்? அதற்காகவ அவர் திராவிடர் என்ற சொல்லைப் பேணினார் பண்பு கெட்ட இன்றைய தமிழைப் பண்புடைய தமிழாக்க வேண்டுமென்றால், அதைத் திராவிடத் தமிழ், தனித் தமிழ் ஆக்குக என்பதே அவர் கருத்து,

-

திராவிடம் என்ற சொல் தமிழினத்தை, வாழ்ந்த பெருந் தமிழினத்தை செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இடைக்காலத்தில் பிரிந்த தமிழகத்தை, செந்தமிழகமாகிய இன்றைய தென்னகத் தமிழகத்தை மட்டுமன்றி, இலங்கையையும், கொடுந் தமிழகங் களாக இடைக்காலத்தில் மாறி இன்று வேறு பெயர் கொண்டி லங்கும் மலையாள, கன்னட, தெலுங்கு மொழிப் பகுதிகளையும் உட்கொண்டது. அந்தத் தமிழகத்தை, பெருந் தமிழகத்தை, புகழ்த் தமிழகத்தை, முழுநிறை தமிழகத்தைக் குறிக்கும் சொல் திராவிடம். அதுமட்டுமன்று,