பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(242

அப்பாத்துரையம் 11

துருவையே இரும்பாகக் கருதுபவனிடம் நாம் இரும்பு என்று சொன்னால், அது அவனுக்கு விளங்காது. அவன் துருவைத்தானே எண்ணுவான். தமிழ்த் தேசிய இனத்தைத் 'தமிழினம்' என்று கூறினால், தேசிய முழு நிறை தமிழைத் தமிழ் என்று கூறினால், மறைமலையடிகள் போன்றவர்கள் - நாவலர் சோமசுந்தரனார், அண்ணல் தங்கோ, கி. ஆ. பெ. விசுவநாதம் போன்றவர்கள்கூட அதை உண்மையான தமிழ், நல்ல தமிழ், தனித் தமிழ் என்று குறிப்பால் அறிந்துகொள்ளக் கூடும். ஆனால், புலவர் தலைவர்களிடையே மறைமலையடிகளுக்கு மட்டும், திராவிட இயக்கத்தவரிடையே அனைவருக்கும் தெரிந்த அரிய உண்மையாதெனில், இன்றைய தமிழன் துருவுக்கே இரும்பு என்று கூறும் தமிழனாவான். அவன் உண்மை இரும்பு என்றால்கூட உண்மைத் துரு என்றுதான் எண்ணுவான்.பழைய இரும்பு என்றாலும் பழைய துரு என்பது தவிர வேறு அவனுக்கு விளக்கம் ஏற்படாது. ஆகவே,

துரு - உயிர்வளி = இரும்பு

என்பதுபோல, தமிழ் - ஆரியம் என்பதைக் குறிக்க ஒரு மயக்கம் தராத அறிவுத் துறைச் சொல்லை (Technical Word) வழங்க எண்ணினர்.

தமிழ், திராவிடம் இவற்றிடையே உள்ள வேற்றுமையை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவது ‘எல்லை' தான்,

தமிழ், தமிழகம் - சிலம்பு பாடிய இளங்கோவின் நாட்டை அயல் நாடாக்குகிறது. சிலப்பதிகாரத்தை அயல்மொழி நூலாக் குகிறது.

-

-

தமிழ், தமிழகம் - தமிழ்ப் பாடலுக்குப் பரிசாக எந்தத் தமிழரசரும் கொடுக்காத அளவு, சோழ பாண்டிய நாடுகளையே விலைக்கு வாங்கிவிடப் போதிய அளவு - நூறாயிரக்கணக்கான பொன்னை ஆனைமலைக் காடு முழுவதையும் தம் நாடு முழுவதையுமே - பதிற்றுப்பத்துப் பாடிய பத்துப் புலவர்க்கும் வழங்கிய வண்டமிழ்ச் சேரரை - பதிற்றுப் பத்துக்கொண்ட நெடுஞ்சோற்றுதியன் சேரலாதனை, இமயவரம்பனை, மேல் நாடு பெற்ற யானைக்கட்சேயை, கடலாண்டு ஆரிய அரசர் தலைமீது தமிழணங்கின் சிலை ஏற்றிய சேரன்

கன்னட