பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

243

செங்குட்டுவனை, கன்னட ஆந்திர நாடுகளை முழுவதும் வென்றாண்ட ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை அயல் நாட்டவராக்கும் சொற்கள் ஆகும்.

தமிழ், தமிழகம் - தொல்காப்பியம் காலப் பாண்டி நாட்டை யும் அதன் தலைநகரையும், தலை இடைச் சங்கப் பாண்டியர் களையும், அப் பகுதியிலடங்கிய இன்றைய இலங்கையையும் அயல் நாடுகளாக ஆக்கி விடும்; அல்ல, அல்ல, ஆக்கி விட்டிருக் கின்றன. இலங்கைத் தமிழர்கூடத் தம் நாடு பண்டைத் தமிழகத்தின் ஒரு பெரும்பகுதி என்பதை மறந்து விட்டனர்.

ஆரிய ஆட்சியிலுள்ள தேயும் தமிழ் வாழும் இடம் நம் தென்னகத் தமிழகம். அத் தென்னகத் தமிழகத்துக்கே தமிழுணர்ச்சி யூட்டிய தமிழர் யாழ்ப்பாணத் தமிழர்கள்! அது இயல்பும்கூட! ஆனால், அத்தகையவர்களையே - விபுலானந்த அடிகள், ஆறுமுக நாவலர் முதலிய ஆராய்ச்சிச் சான்றோர் களையே தமிழ் வரலாறு மறந்துவிடச் செய்த சொற்கள் தமிழ், தமிழகம் என்ற சொற்களே. தேய்ந்த 'ஆரியத் தமிழ்' பேசும் தமிழர் வழங்குவதனால் மெய்ப் பொருள் கெட்டுப்போன இச் சொற்களே யாகும். ஏனெனில், அவர்கள் யாவரும் வாழும் இலங்கையைத் தமிழருக்கு அயலான நாடு என்றே கருதி, அக் கருத்தை இலங்கையிலும் தமிழுலகிலும் வெளியேயும் பரப்பி விட்டனர்! இலங்கை - பாண்டியர் ஆண்ட இலங்கை, தொல்காப்பியர் வாழ்ந்த இலங்கை என்பதை மறந்து அது விபீடணன் ஆண்ட இலங்கை என்று நினைத்துக் கொண்டனர்.

இலங்கைத் தமிழகம் தமிழகத்தின் ஒரு பகுதி. அது தமிழர் குடியேறிய நாடல்ல. இராமாயண காலத்தில் இலங்கைக்கும் தென்னாட்டுக்கும் இன டையே கடல் புகுந்துகொண்டது. ஆனால், ராமாயண காலத்துக்கு முன், தொல்காப்பியர் காலத்தில், டைச்சங்க, தலைச்சங்க நாட்களில், பாண்டி நாடும் தமிழகமும் இலங்கையில் மட்டுமல்ல, அது தாண்டி நெடுந்தொலை பரவியி ருந்தன. அவை பரவியிருந்த பகுதிகள் கடலால் பிரிக்கப்பட்டும், கடலடியில் நழுவிப் புடைபெயர்ந்துமே இன்றைய மடகாஸ்கர், மலாயா, தென் கிழக்காசியத் தீவுகள், ஆஸ்டிரேலியா, மேலை அமெரிக்காவாக மாறியுள்ளன என்று நில நூல், உயிர் நூல், செடி நூல், இன நூல் அறிஞர் கூறுகின்றனர்.