பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




244) || — —

அப்பாத்துரையம் 11

தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் குடியேறிய தமிழன் உண்டு. ஆனால், அது திருநெல்வேலியிருந்தும் தஞ்சையி லிருந்தும் சென்னைக்குக் குடியேறுபவர்கள் போன்ற நிலையேயன்றி வேறன்று. வரலாற்றுக் காலங்களில் குமரிக்கு வடக்கிலுள்ள தமிழகத்திலிருந்து இலங்கைக்குப் பலர் சென்ற துண்டு. அது போலவே இலங்கையிலிருந்து குமரிக்கு வடக்கி லுள்ள தமிழகத்துக்குக் குடிபெயர்ந்த தமிழரும் ஏராளம். தமிழரில் ஒரு பெரும் பகுதியினரும் மலையாள நாட்டவரில் ஒரு பெரும் பகுதியினரும் ஆன ஈழவர் என்ற சமுதாயப் பெயர் அதற்கு இன்றளவும் சான்றளிக்கிறது.

இலங்கையின் மிகப் பழமையான பெயர் தாம்பிரபர்ணி

என்பதே.

-

தமிழ், தமிழகம் - தெலுங்கர் கன்னடியரையும், வங்காளி குசராத்தியரையும், சீன சப்பானியரையும், டேனியர் பின்னி யரையும் ஒருங்கே அயலாராக்கும் சொற்கள். இது அப்பா அம்மை தவிர மற்ற எல்லாரையும் மாமன் மைத்துனர் சிற்றப்பன் சின்னம்மை - தங்கை தமக்கை கணவன் ஆகிய எல்லாரையுமே - அயலாரென்று கருதும் 'இனமடமை' யை இன்றைய தமிழனிடம் - தமிழனிடம் மட்டுமே உண்டு பண்ணி யிருக்கிறது. ஏனெனில், வடவர் தம் இன எதிரியான புத்தரை ஆரியராக்கி, தென்னாட்டுக்கும் தெற்கிலிருக்கும் சிங்களவர் களையும் அவர்கள் மொழியையும் துணிந்து ஆரியம் என்று நிலைநாட்ட முற்பட்டு, பண்டைப் பாண்டியரும் சோழரும் ஆண்ட மலாயா, சுமாத்ரா, சயாம், இந்து சீனப் பகுதிகளில் தமிழர் நாகரிகச் சின்னங்களையே மறைத்துத் திரித்து உலகுக்கு ஆரியச் சின்னங்களாகக் காட்டி வருகின்றனர்.

ஓமந்தூரார் ஆட்சியின்போது நம் அமைச்சர்கள் உள்ளங் களிலும் கண்களிலும் திராவிட ஒளி காட்டி அவர்களையும் அவர்கள் பரிவாரங்களையும் முக்காடிட்டு அவ்வொளியை மறைக்கச் செய்த நிகழ்ச்சிகள் பல உண்டு. 'நம் நாடு', 'திராவிட நாடு, பழைய ‘மாலைமணி' வாசகர்கள் அவற்றை முற்றிலும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால், ஒரே ஒரு நிகழ்ச்சியை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.

-