பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

அப்பாத்துரையம் - 12

வேடம் பூண்டு புல் விற்பவராகவும், சரக்கு விற்பவராயும் புரட்சிக் காரர்கள் சிறையண்டை வந்து தங்கினார்கள். சிறையிலிருந்த பாஞ்சாலங்குறிச்சிக் கைதிகளும் அவர்களும் திடுமெனப் புரட்சிக்குரல் கிளப்பினார்கள். 'வீரபாண்டியன் புகழ் வாழ்க! வெள்ளையர் ஆதிக்கம் வீழ்க!' என்ற முழக்கம் எங்கும் எழுந்தது.

சிறை வீழ்ந்தது. வீரபாண்டியனின் வீரத்தம்பி ஊமைத்துரை உட்படப் பாஞ்சாலங்குறிச்சி வீரர் புரட்சிப் படையுடன் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி விரைந்தனர்.

வெள்ளையர் அப்போது வீறாப்புடன் உண்டு குடித்து அயர்ந்திருந்தனர். வெள்ளையர் பிடியை அன்று யாராவது வீழ்த்த நினைத்திருந்தால், பல ஆண்டுகளாவது மீளாமல், அன்று வீழ்த்தியிருக்கலாம். ஆனால், புரட்சி வீரர் குறிக்கோள் தற்காலிக வெற்றியன்று. அதே சமயம், இறுதி வெற்றி உடனடியாகத் தங்கள் கையிலில்லை என்று அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால், இறுதி வெற்றியாகிய குறிக்கோளை நாட்டு மக்களுக்கு அறிவித்து, அதன் சின்னத்தைக் காப்பதிலும் அதன் முதற்படிப் போராட்டத்தை நடத்தி அதில் தம் உயிர்களைப் பலியிடுவதிலும் அவர்கள் கருத்துச் சென்றது.

அவர்கள் நாடிய குறிக்கோள் மாநில உரிமை. அதன் சின்னம் கோட்டை கட்டி ஆளும் உரிமை. அவர்கள் தரை மட்டமாக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இராப்பகலாய் நின்று கட்டி, அதை இந்தியாவின் முதல் சுதந்தரச் சின்னமான கோட்டையாக்கினார்கள்.

புதிய கோட்டை கட்டப்பட்ட முறை, வரலாற்றில் பொறிக்கத்தக்க சிறப்பு வாய்ந்தது. ஆண்டு மாதக்கணக்கில் கட்டப்பட்ட பழைய கோட்டை, இரண்டு மாதத்தில் கட்டப்பட்டது. இரண்டாயிரம் வீரர் அதில் ஈடுபட்டனர். சின்னப் பேந்திரன் என்ற வீரவள்ளல், அதற்குப் பணம் உதவியதாக அறிகிறோம். கோட்டை முன்னிருந்தது போன்ற மண்கோட்டை தான்; அவசரமாகக் கட்டிய கோட்டைதான். ஆனால், பழைய கோட்டையைவிட அது வெள்ளையரின் பீரங்கித் தாக்குதலுக்கு நீடித்துத் தாக்குப் பிடித்தது. அது முற்றிலும் நீரில்லாமல் பனஞ்சாற்றினால் பிசைந்து