பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

81

கட்டப்பட்டதே அதன் உறுதிக்குக் காரணம் என்பது தெரிகிறது.

சிறையிலிருந்து தப்பியவர்களைத் தேடிய வீரர் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைக் கண்டு மூக்கில் கை

வைத்தனர்.

தென் தமிழகமெங்கும் மீண்டும் விடுதலை பெற்றது. பாஞ்சாலங்குறிச்சி இப்போது முன்னிலும் போட்டியற்ற வீரத் தலைமை பெற்றது. ஆங்கில அதிகாரிகள் சிறைப்பட்டார்கள். ஆனால், ஆங்கிலப் பெண்மணிகளின் கண்ணீருக்கிரங்கி ஊமைத்துரை பலரை விடுதலை செய்தான். வீரபாண்டியனை விடச் சிறந்த வீரனென்று பெயரெடுத்த ஊமைத்துரை, அவனை விடப் பெருந்தன்மையும் இரக்க உள்ளமும் உடையவனாகவே இருந்தது வியத்தற்குரியது.

இரண்டாவது வீர காவியம்

முதல் தாக்குதலில் கோட்டை கொலைக்களமாயிற்று. புதுப்படை வரும்வரை அவர்கள் காத்திருந்தார்கள். வீரம், படைத்தலைமைத் திறம், அரசியல் சூழ்ச்சி ஆகியவற்றில் ஊமைத்துரை வீரபாண்டியனை விஞ்சியிருப்பது கண்டு, வெள்ளையர் வீரபாண்டியனைக் கொடுமைப்படுத்திய தம் அறியாமைக்கு வருந்தினர்.

கோட்டை தகர்க்கும் பீரங்கியும் படையும் சென்னையி லிருந்து வர நாளாயிற்று. அருகில் இலங்கையிலிருந்தும் படை வரவழைக்கப்பட்டது.

எட்டயபுரம், புதுக்கோட்டைக் கூலிப்படைகளும் சேர்ந்து கோட்டையைத் தாக்கின. நாட்கணக்கில் பீரங்கிகள் முழங்கிக் கோட்டையைத் தகர்த்தன; குண்டு மாரிகள் பெருஞ்சேதம் விளைத்தன. காயம்பட்டவர்களிடையே பெண்களும் குழந்தைகளும் இருந்தார்கள். ஊமைத்துரையின் சூல் கொண்ட மனைவியும் அவன் சிறுவனும் இருந்தனர். அவர்களுடன் வீரர் போரிட்டே வெளியேற வேண்டும் என்று ஊமைத்துரை ஆணையிட்டான்.