82
அப்பாத்துரையம் - 12
வீரர் அனைவரும் போரிட்டு மாண்டனர். பெண்டிர் உடல்களும் பிள்ளைகள் உடல்களும் அவர்களிடையே கிடந்தன. வெள்ளைப் பெண்கள், பாதுகாப்புடன் வெளியே விடப்படாமல், வீரருடன் வீரராய் மாண்டனர்.
ஊமைத்துரை காயம் பட்டவர்களுள் ஒருவனாகக் குற்றுயிருடன் கிடந்தான். ஆனால், குற்றுயிருடன் கிடக்கும் தன் பிள்ளையை மீட்க வந்த ஒரு வீரத்தாய், மகன் வேண்டுகோளுக் கிணங்கி, மகனுயிரைவிட்டு ஊமைத்துரை உயிரைக் காத்தாள்; ஊமைத்துரைக்காக அரும்பாடுபட்டாள். அவன் மீண்டும் புரட்சித் தலைவனானான். ஆனால், அவ்வீரத்தாய் அதற்காகத் தண்டனை பெற்றாள்.
ஊமைத்துரை சிவகங்கை சென்று, அதன் தலைவர்களான சின்ன மருது, பெரிய மருது என்பவருடன் சேர்ந்து போரிட்டான். ஆனால், இத்தடவை அவர்கள் சிறைப்பட்டார்கள். ஊமைத்துரையுடன் அவர்கள் பாஞ்சாலங்குறிச்சியிலேயே
1801ல் தூக்கிலிடப்பட்டார்கள்.
பாஞ்சாலங்குறிச்சிப் புரட்சி இங்ஙனம் முடிவுற்றது. பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம், எட்டயபுரம், மணியாச்சிப் பாளையங்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது.
1792இல் தொடங்கிய சச்சரவு, 1798ல் பெரும் போராட்ட மாயும் நாட்டுப் புரட்சியாயும் மாறி, 1801-ஆம் ஆண்டுடன் முடிவுற்றது.
முன்னணிப் போரும் முழுநிறைப் போரும்
பாஞ்சாலங்குறிச்சிப் போரில் ஈடுபடாவிட்டாலும் வீரபாண்டியனுடன் நட்பாயிருந்தனர் என்ற காரணத்துக்காகவே சிவாஜியின் மராட்டிய மரபில் வந்த தஞ்சை அரசர் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது. அவர் உரிமைகள் படிப்படியாகக் குறுக்கப்பட்டன. அவர் அரசுரிமை முற்றிலும் போக்கப்பட்டது. ஆட்சி முதல்வர் டல்ஹௌஸி காலத்திலேயே தொடங்கிய இச்செயல்கள் மன்னர் மரபுரிமை அட்டூழியங்களே இந்தியாவின் பெரும்புயலான 1857-ஆம் ஆண்டுப் புரட்சிப் போராட்டத்துக்கு உடனடிக் காரணமாயின என்பது நினைவு கூரத்தக்கது.