இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
83
பாஞ்சாலங்குறிச்சிப் புரட்சிப்போர் தமிழகம் எழுப்பிய சுதந்தரத்தின் முதல் குரல். அதுவே பாரத விடுதலைப் போரின் முன்னணி முரசம். வீர பாண்டியன், ஊமைத்துரை, வெள்ளையத் தேவர், அவர்கள் உடன்பிறந்த நங்கையர், மனைவியர்களின் வீரப்புகழ், அச்சுதந்தரப் போராட்டத்தின் முன்னணிக் கொடி அம்முன்னணிப் போரையடுத்து வடதிசை முழுப்போர் கிளர்ந்தெழுந்தது.
தூங்குகின்ற சிங்கமாகிய இந்தியாவின் கழுத்தில் ஆதிக்க நுகத்தடி விழுந்தபின் அது பின்னும் தூங்கியிருக்கவில்லை. ஆதிக்கம் தொடங்கிய அதே சமயத்தில் அதன் விடுதலை உறுமல் தொடங்கிவிட்டது. பாஞ்சாலங்குறிச்சியிலெழுந்த அவ்வுறு மலை அடுத்து, அதன் பெருமுழக்கம் தில்லியில் கேட்கத் தொடங்கிற்று.
தெற்கே பாஞ்சாலங்குறிச்சி வாயில் வழியாக விடுதலைத் தெய்வம் தில்லிக் கோபுர வாயிலில் காலடி எடுத்து வைத்தான்.