5. விடுதலைப் புயல்
புயல், சூறாவளி, புரட்சி
டி, காட்டுத்தீ- இவை
புயல், சூறாவளி, மின்னல், இயற்கையின் அழிவுச் சத்திகள்! ஆனால், இவ்வழிவுச் சத்திகளிலிருந்துதான் புது வாழ்வு பிறக்க முடியும். புயலையும் மின்னலையும் காண்பவர். அவற்றின் அழிவுச் சத்திகளைத் தான் நேரடியாக உணர்வர்; அவற்றின் ஆக்க ஆற்றலை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. ஆனால், அவற்றின் அழிவுச் சத்திகளுக்கும் ஆக்கத்துக்கும் நேரடியான- இன்றியமையாத-தொடர்பு உண்டு.
ஒரு தோட்டத்தின் முக்கியத் தேவை நீரும் உரமுமல்ல.
அவை மட்டுமிருந்தால், அது தோட்டமாகாது; ஒரு சிறு காடே ஆகும். ஏனெனில், மனிதன் தரும் நீரும் உரமும், இயற்கை தரும் நீருக்கும் உரத்துக்கும் ஈடாகமாட்டா. இயற்கை அவற்றால் பெருங்காடுகளை உண்டுபண்ண முடியும்; மனிதன் சிறு காட்டையே உண்டுபண்ணக் கூடும். ஆனால், இயற்கையால் முடியாத ஒரு சிறு செயலால் அச்சிறு காட்டை அவன் தோட்டமாக்கி விடுகிறான். அச்சிறு செயல்தான் களை நீக்குதல். ஒழுங்கமைத்தல் ஆகிய அவன் செயற்கை முயற்சி, இவை இரண்டும் வளர்ச்சியில் திட்டம் அமைக்கின்றன.
மனிதன் சிறு சீர்திருத்தத் திட்டத்தைத் தோட்டத்தில் காண்கிறோம். தனி மனிதன் சிறிய வாழ்வில் ஆக்கம் உண்டு பண்ண இச்சிறு திட்டங்கள் போதும். அதில் அழிவுறும் களைகளும் சிலவே. ஆனால், இவை சிறு அளவிலேயே பயிர் நாற்றுகளை அழிக்க முடியும். இயற்கையின் வாழ்வில் பயிருடன் களையும் வளர்ந்த காட்டைத் திருத்த, இயற்கை மேற்கொள்ளும் திட்டமே காட்டுத்தீ, புயல், சூறாவளி, மின்னல், இடி ஆகிய உருவங்களை மேற்கொள்கின்றது. அவை இயற்கையின் களைக்கொட்டுக் கருவிகள், கோடரிகள், சுத்தியல்கள்;