பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

87

எங்கும் திட்டமிடப்பட்ட ஒரே மக்கள் போராக நடைபெற்றது. மேலும், போருக்காளான நாட்டின் இப்பெரும் பகுதியிலும் பிரிட்டிஷ் ஆட்சியும் ஆதிக்கமும் இரண்டோர் ஆண்டுகள் சாய்ந்து ஓய்ந்து விட்டன. அவ்விடங்களில் ஆண்டுக் கணக்கில் விடுதலை ஆட்சி நடைபெற்றது.

புரட்சிக்கால விடுதலை ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சியின் ஆட்சித் தொடர்பு, படைத் தொடர்பு, செய்திப் போக்குவரவுத் தொடர்பு ஆகிய யாவற்றையும் துண்டித்துவிட்டது. மேல் திசையில் இலாகூரிலிருந்து, கிழக்கே கல்கத்தா வரை புரட்சிக்காரர் கைப்பட்டது. மேற்கிந்தியாவிலிருந்து செய்தியோ படையோ கல்கத்தா செல்ல வேண்டுமானால், கடல் வழியாகத் தென்னிந்தியாவைச் சுற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டும். அல்லது தென்னிந்தியா வழியாகச் செல்ல வேண்டும். மைய வடவிந்தியாவின் நிலை பற்றி வெளி உலகத்தில் செய்தி பரவ ஆண்டுக்கணக்கான தாமதம் ஏற்பட்டது.

புரட்சியின் குறைபாடுகளும் விளக்கங்களும்

ஆனால், பிரிட்டிஷாருக்கு நல்ல காலமாக 1857-ல் பிரிட்டிஷார் கையில் கடலாதிக்கம் இருந்தது. மேற்கு, தெற்கு, கிழக்குக்கோடிகளும் அவர்கள் பிடியில் இருந்தன. இந்நிலையைச் சுட்டிக்காட்டி1857-ல் எழுந்த விடுதலை இயக்க வரலாறு எழுதிய திரு அசோக மேத்தா, அதற்குச் சில விளக்க உரைகள் தருகிறார். புரட்சியில் கிளர்ந்தெழுந்த பகுதி இந்துஸ்தானி பேசும் வடநாட்டுப் பெரும்பகுதியே என்றும், பிற பகுதிகள் பொதுவாகவும், தென்னாடு சிறப்பாகவும் அதில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இதற்கு அவர் தரும் விளக்கம் விசித்திரமானது! வடவிந்தியாவில் படை வீரராயிருந்தவர் பெரும்பாலும் உயர் வகுப்பினராயும், பிராமணராயும் இருந்தனர்; தென்னிந்தியாவில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவராய் இருந்தனர். தாழ்த்தப்பட்டவர்கள் L பிரிட்டிஷ் ஆட்சியை ஓட்டிச் சலுகைகளை எதிர்பார்த்ததால், அவர்களிடையே அயல்நாட்டு வெறுப்பும் தேசீய ஆர்வமும் கனன்றெழவில்லை. இதுவே அசோக மேத்தா தென்னிந்தியாவின் தனிச்சிறப்புக்குத் தரும் காரணம்.