88
அப்பாத்துரையம் - 12
ஆனால், புரட்சியின் சூழ்நிலைகளை விளக்கும் முறையில் திரு. அசோக மேத்தாவைவிடத் திரு. சவர்க்கார் தொலை நோக்குடையராயும் தேசீய மனப்பான்மையுடையராயும் விளங்குகிறார். உண்மையில் 1857-ல் தேசீய ஆர்வத்தில் மொழி எல்லை, நாட்டெல்லை எதுவும் இல்லை. இந்திய மாநில முழுவதும் ஒரே உணர்ச்சியுடையதாகவே இருந்தது. இயக்கத்தைத் தொடங்கி நடத்திய தலைவர்கள் கங்கைக் கரையிலிருந்தார்கள். ஆனால், இந்தியா முழுமையிலுமே அதைப்பரப்ப அவர்கள் முயற்சி எடுத்துக் கொண்டார்கள். இந்தியா முழுவதுமே அதன் எதிரொலிகள் எட்டவும் செய்தன. ஆனால், தொலைமிகுந் தோறும் தொடர்பு குறைந்தது; தடைகள் பெருகின. பிரிட்டிஷ் இந்தியாவின் அக்காலத் தலைநகரான கல்கத்தாவிலும், பாதுகாப்பெல்லையான வடமேற்கிலுமே பெரும்பகுதி ஆங்கிலப் படைகள் இருந்தன. அத்துடன் மேற்கிந்திய எல்லையிலும் தென்னிந்தியாவிலும் இயக்கம் பரவாமல் இரு திசைகளிலும் இரண்டு வரிசை அடிமை இந்திய அரசுகள் உண்டுபண்ணப்பட்டிருந்தன. இதனால், மேற்கிந்தியாவில் புரட்சியின் அதிர்ச்சி இருந்தாலும், எழுச்சி ஏற்பட முடியவில்லை. தெற்கே அதிர்ச்சி கூட ஏற்பட முடியாமல், இந்த அடிமை நாட்டரசுகள் தடுத்தன. அதிர்ச்சி தோற்றியதும் மிகப் பிற்பட்டேயாதலால், அது எளிதில் நசுக்கப்பட்டது.
இந்த நாட்டரசுகள் எவ்வாறு ஏற்பட்டன?
மேற்கே இரஞ்சித சிம்மன் பிரிட்டிஷ் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்திய வீரன். அவனுக்குப் பின் சூழ்ச்சியால் பாஞ்சாலம் வீழ்ந்தது. பழைய அரசுகள் வீழ்த்தப்பட்டு,அவற்றில் முழுதும் அடிமை மனப்பான்மையுடையவர்களும், பிரிட்டிஷாரைச் சார்ந்தே அரசுரிமை பெற்றவர்களுமே அமர்த்தப்பட்டார்கள். இவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் உதவியாலேயே தோன்றிப் பிழைத்து வாழ்ந்து வந்தவர்களாதலால், தேசீய ஆர்வத்தை அவர்கள் நசுக்கப் புறப்பட்டது வியப்புக்குரியதன்று. தெற்கிலும் மராட்டிய அரசுகள், நிஜாம் ஆகியவை இதுபோன்ற நிலையிலிருந்து புரட்சிச் செய்திகள் தெற்கே பரவாமல் தடுத்தன. தென்கோடியில் தமிழகத்தில் பாஞ்சாலங்குறிச்சி வீர மரபும், அதற்குத் துணைபுரிந்த வீர மரபுகளும், வடக்கே மைசூரில்
உ