இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
89
திப்புவின் வீர மரபும் ஒழிக்கப்பட்டிருந்தன. அவர்களை எதிர்க்க உதவிய அடிமை மரபுகள் மட்டுமே இங்கே எஞ்சியிருந்தன. புரட்சியின் குரல் கூடிய மட்டும் இந்தியாவின் கோடிகளில் எட்டாமலும், எட்டியபோதும் எதிரலை எழாமலும் காத்த அடிமைக் கோட்டைகள் இவைகளே. அது மட்டுமன்று, வடவிந்தியாவிலேயே புரட்சி தோற்றதற்கு மிகப்பெரும் பொறுப்பு வகிக்க வேண்டியவர்களும் இவர்களே.
உரிமை வேட்கையின் எல்லையை மொழி எல்லை தடுத்து நிறுத்தவில்லை. மேற்கிலுள்ள மராட்டியர் புரட்சியில் கிளர்ந் தழாமல் அடிமை மன்னர் மரபுகள் காத்தன. ஆனால், குவாலியர் போன்ற அரசுகளில் மன்னரை மீறி வீரர் கிளர்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர். மேலும், வடக்கே இதே மராட்டிய மரபினரான நானாசாகிபும், ஜான்ஸி லட்சுமிபாயுந்தான் இயக்கத்தின் முதற் சிறப்பு வாய்ந்த தலைவராயிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
சீக்கியர் படைகளும் கூர்க்கர் படைகளும் புரட்சியில் கலவாதிருந்ததுடன் அதை அடக்கும் வகையிலும் பயன்படுத்தப் பட்டன என்பது உண்மையே. இவை, தென் இந்தியாவைச் சேர்ந்தவையல்ல. வடவிந்தியாவுக்கு உரியவையே எனினும், இது பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் வெற்றிமட்டுமே. வடவிந்தியாவில் முதன் முதல் பிரிட்டிஷாரின் சூழ்ச்சிக் கருவிகளாய் இருந்து பாஞ்சாலத்தின் வீர சுதந்தரத்தைச் சூறையாடவும். கூர்க்கரின் வீர சுதந்தரத்தைத் தாக்கவும் பயன்பட்டவர் உத்தரப் பிரதேசம் அல்லது கோசலத்திலுள்ள உரோஹில்ல வீரரே ஆனால், பிரிட்டிஷாரை எதிர்ப்பதில் அவர்கள் முனைந்தபோது பிரிட்டிஷார் அவர்கள்மீது பாஞ்சால சீக்கியருக்கும், கூர்க்கருக்கும் இருந்த பகைமையைக் கிளறி அவர்களைக் கருவியாக்கிக் கொண்டனர். இன்றளவும் உரோஹில்ல வீரமரபினர், ஒன்று குற்றப்பரம்பரையினராகவோ அல்லது போர்த்திறமற்றவர்களாகவோ ஆங்கிலச் சூழ்ச்சிக்காரப் படைத்தலைவரால் ஒதுக்கப்பட்டுள்ளனர். தென்னிந்தியாவின் மறவர் வகுப்புகளின் நிலையும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் போர்த்திற வகுப்புகள் என வகுக்கப்பட்ட வற்றில் வீர மராட்டியரும் உரோகில்லரும் இடம் பெறாதது