பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

91

எழுந்திருந்தால், சீக்கியர் எழுச்சி, கூர்க்கர் எழுச்சி, பாஞ்சாலங் குறிச்சிப் புரட்சி, ஆப்கனிஸ்தான் போர் ஆகியவற்றுடன் சமகாலத்ததாகி, முழு இந்திய மாநில இயக்கமாய் வளர்ந்திருக்கும்.1857ஐ அடுத்துப் பாரஸீகப் பூசல், சீனப் போர், கிரீமியாப் போர் ஆகியவை முடிந்துவிடாமலிருந்தாலும், இந்நிலை ஏற்பட்டிருக்கும். புரட்சி விரைவில் அடக்கப்பட, இத்தகைய உலகச் சூழல்கள் உதவின.

உலக எல்லையில் அலை எதிர் அலைகள்

குறைபாடுகளுக்கிடையிலும், 1857 புரட்சி இந்தியாவின் முதல் மாநிலப் பெரும்புரட்சி மட்டுமன்றி, இந்திய மாநிலத்தின் வீறுமிக்க ஒரே பாரத காவியமுமாகும். பாஞ்சாலங்குறிச்சி வீர காவியத்தை அதன் முகப்பு வாயிற்கோபுரம் என்று கூறலாம். விடுதலை இயக்கம் 1857க்குப்பின் அரசியல் இயக்கமாய் நடந்தாலும், போராய் மீண்டும் இந்திய மண்ணில் அஃது என்றும் நடைபெறவில்லை. தலைவர் பெருந்தகை சுபாஷ் போஸின் போர், இம்மரபில் வந்த போரேயானாலும், அது மலேயா, பர்மா என்னும் இடங்களில் உருவாகி, அஸ்ஸாம் எல்லைப் புறங்களில் மட்டுமே நடைபெற்றது. இரண்டாம் உலகப் போரின் போக்கால் அப்போரும், மாநிலப் போராக வளருமுன், இடையிலேயே முறிவுற்றது.

உலக வல்லரசாயிருந்த பிரிட்டனை உலக அடிப்படை யிலேயே எதிர்த்தழிக்க முடியும் என்று தலைவர் பெருந்தகை போஸ் கருதியது போலவே திப்பும் கருதியிருந்தான் என்பதை அறிகிறோம். பாஜிரா பேஷ்வாவின் உரிமையாளரான நானா சாகிபு, அத்தலைவர்களுள் ஒருவர். அவர் மரபுரிமை கோரி அவருடைய பிரதிநிதியாய் இங்கிலாந்தில் வழக்காடச் சென்றிருந்த அரசியலறிஞர் அஸிமுல்லாகான் என்பவர். இந்தியாவிலிருந்தே வந்திருந்த மற்றோர் அறிஞர் ரங்கபாபு என்பவர். இவ்விருவரும் பிரிட்டனிலிருந்து கொண்டே இந்தியாவின் நிலைபற்றி ஆராய்ச்சிகள் செய்து மூலத்திட்டம் வகுத்தனர்.

இவ்விரு அரசியல் தலைவர்களுள் ரங்கபாபு நேராக இந்தியா வந்துவிட்டார். ஆனால், அஸிமுல்லாகான் இந்தியாவில்