பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

அப்பாத்துரையம் - 12

பிரிட்டிஷ் பிடியைத் தடுக்கும் அதே சமயத்தில், பிரிட்டிஷ் பேரரசை உலகெங்கும் தாக்க வகை தேடவேண்டும் என்று எண்ணினார். இந்நோக்கத்துடன் அவர் ஐரோப்பா எங்கும் பயணம் செய்தார். பின்பு அவர் முஸ்லிம் உலகின் நடுநாயக அரசான துருக்கியையும், அடுத்து, அவ்விரு நாடுகளின் ஒத்துணர்வையும், முடியுமானால் ஒத்துழைப்பையும் நாடினர். இவை எவ்வளவு தொலை பயன்பட்டிருக்கத்தக்கவை என்பது இப்போது கூற முடியவில்லை. முடியவில்லை. வரலாற்றின் போக்கு அவ்வொத்துழைப்பை வரவழைக்கு முன், புரட்சி விரைந்து முடிவுற்றுவிட்டது என்றே கூற வேண்டும்.

அஸிமுல்லாகானும், ரங்கபாபுவும் இந்தியா வருமுன்பே 1856லிருந்தே நானாசாகிபு புரட்சிப் போரை இந்திய மாநில அடிப்படையில் தொடங்க எண்ணி, இந்தியா முழுவதுமுள்ள மன்னர், படைவீரர், மக்களுக்குத் தூதுவர்களையும் பிரசாரர் களையும் தம் கையொப்பமிட்ட கடிதங்களுடன் அனுப்பி யிருந்தார். அயோத்தியை ஆங்கிலேயர் கைப்பற்றின அட்டூழியம் கேட்டபின், இந்தியாவெங்குமிருந்து இவ்வழைப்புகளை ஏற்று மறுமொழிகள் வந்தன. இதன் பின்பு மாநிலத்தின் பல்வேறு கோடிகளிலும் புரட்சிகரமான சுவரொட்டி விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. 1857-ஆம் ஆண்டுத் தொடக்கத்திலேயே சென்னையில் விடுதலைப் போர் அறிவிப்புகள் சுவர்களில் தீட்டப்பட்டிருந்தன என்று அறிகிறோம்.

அயோத்தியில் மற்றொரு புரட்சிப் பெருந்தலைவரான மௌல்வி அகம்மதுஷா இருந்தார். இவர் 1852லிருந்தே புரட்சிச் சங்கங்களை அமைத்து வளர்த்து வந்ததாக அறிகிறோம். பேனா வீரர், வாள் வீரர் என்னும் இரு தகுதியும் ஒருங்கேயுை இப்பெரியாரையே நாம் புரட்சியின் தந்தையார் என்னலாம். இந்தியாவெங்கும் இரகசியப் புரட்சிச் சங்கங்களை ஒழுங்கமைத்த தலைவர் இவரே.

புரட்சி இயக்கத்தின் மற்றப் பெருந்தலைவர்களான நானா சாகிபு, அஸ்முல்லாகான் என்பவர்கள் கான்பூர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஆக்கிரா, தில்லி, மீரத்து, பாட்டினா, கல்கத்தா என்னும் இடங்களில் தீவிரப் புரட்சிச் சங்கங்கள் இருந்தன. தெற்கிலும்