இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
93
சங்கங்கள் அமைக்க முயற்சிகள் நடைபெற்று வந்தன என்பதை அறிகிறோம். இவற்றிடையே மிக விரைவான எழுத்துப் போக்கு வரவுகள் இருந்தன.
இந்தியா முழுவதும் ஒன்றுபட்டு ஒரே நாளில் மே 31-ஆம் தேதி புரட்சி தொடங்குவதென்று திட்டம் செய்யப்பட்டிருந்தது. தொடக்க நாள் மறைவாகவே வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தலைவர்களுக்குள் அது தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்நாளில் புரட்சித் தொடக்கத்தின் அறிகுறியாக எங்கும் செவ்வல்லி மலரை அனுப்புவது அல்லது அடையாள வேட்டுகள் போடுவது என்று தீர்மானித்திருந்தனர்.
அணை உடைந்தது
திட்டப்படி புரட்சி தொடங்கும் நாளுக்காகத் தலைவர்கள் காத்திருந்தார்கள். படைவீரரும் அதற்குச் சித்தமாயிருந்தனர். ஆனால், மக்களால் அவ்வளவு பொறுமையாக இருக்க முடியவில்லை. மடை திறக்குமுன் வெள்ளம் எந்தவிடத்தில் எந்தச் சமயத்தில் அணையுடைத்துப் பீரிட்டுவிடுமோ என்ற நிலை இருந்தது. புரட்சித் திட்டம் பற்றியும், அதன் வலிமை பற்றியும் ஆட்சியாளருக்கு எதுவும் தெரியாமலிருந்தது. ஆகவே, அவர்கள் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் இச்சூழலிடையே நெருக்கடியை உண்டுபண்ணின. அவர்கள் இந்தியப் படைவீரரை அடக்கி ஒடுக்க முயன்றார்கள். அது முடியாத இடத்தில் அவர்கள் படை வீரர்கள் படைக்கலங்களைக் கீழே போடச் செய்து அமைதியாக இந்தியப் படைகளைக் கலைக்க முயற்சி யெடுத்துக்கொண்டார்கள். இவ்வவமதிப்பை வீரரால் பொறுக்க முடியவில்லை. தலைவர்கள் கட்டளையை எதிர்பார்த்து வீரர்கள் பலவிடங்களில் பொறுமையாயிருக்க முயன்றார்களானாலும், புரட்சித்திட்ட விவரமறியாத நிலைமையில் மக்கள் படை வீரர்களின் உணர்ச்சியைக் கிளறித் தூண்டினார்கள். பல டங்களில் அவர்கள் தாங்களே கிளர்ந்தெழுந்தார்கள்.
மார்ச்சு 29-ஆந் தேதியன்று வங்காளத்திலிருந்த 19-ம் பிரிவுப்படை ஆயுங்களைக் கீழே போடும்படி கட்டளையிடப் பட்டது. பலரும் ஆயுதங்களைக் கீழே வைத்தனர். ஆனால்,