பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

அப்பாத்துரையம் - 12

மங்கள பாண்டே என்ற பெருவீரன் ஆயுதத்தைக் கீழே வைக்க மறுத்ததுடன்,வெள்ளைத் தலைவர் சிலரைச் சுட்டும் வீழ்த்தினான். இதற்காக அவன் ஏப்ரல் 8-ஆந் தேதி தூக்கிலிடப்பட்டான். இச்சிறு செய்தி இந்தியா முழுவதும் படை வீரரிடையே பெருங் கொதிப்பை உண்டுபண்ணிற்று. கீழ்க் கோடியில் நடைபெற்ற இதன் எதிரொலி, மேற்கோடியிலுள்ள அம்பாலாவில் கேட்டது. இங்கே படைகள் கிளர்ந்தெழுந்து வெள்ளையர் வீடுகளைத் தாக்கித் தீ எழுப்பின. இதனையடுத்து மீரத்தில் புரட்சியின் முதல் பெருந்தீயே கிளம்பி விட்டது.

ஆறு மணி நேரத்தில் மீரத்தில் வெள்ளையராட்சி தடைபட்டு விட்டது.படைவீரர் எங்கும் வெள்ளையர் தடத்தை அழித்துக்கொண்டு தில்லி நோக்கிப் புறப்பட்டனர்.

தில்லியும்

புரட்சியுணர்ச்சியுடன்

துடிதுடித்துக் கொண்டிருந்தது. முகலாயப் பேரரசரான பகதூர் ஷா, தம் குடும்பத்துடன் புரட்சியில் கலந்து, அதற்குத் தலைமை தாங்கினார், மே 11-ஆந் தேதிக்குள் மீரத்தைப் போலவே தில்லியும் விடுதலை பெற்றுவிட்டது.

புரட்சியில் மக்கள் துடிப்புக்கும் ஆர்வத்துக்கும்,மீரத்துப் படைவீரர் எழுச்சி ஒரு முதல் தரச் சான்று. ஆனால், இதுவே புரட்சியின் வலுவைக் குறைக்கவும் வழி செய்தது. புரட்சியின் வலிமை பற்றியும், திட்டம் பற்றியும் பிரிட்டிஷார் அதுவரை பெரிதும் அசட்டையாயிருந்தனர். மீரத்து எழுச்சி அவர்களுக்கு ஒரு நல்லெச்சரிக்கையாயிற்று. முழுப் புரட்சிக்குக் குறிக்கப்பட்ட நாளுக்கு அப்போது மூன்று வாரங்கள் இருந்தன. அதற்குள் வெள்ளையர் புரட்சியைச் சமாளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யவும், படைவீரர்களை நம்பாமல் முன் கருத்துடன் நடவடிக்கைகள் எடுக்கவும் வகை ஏற்பட்டது. அவர்கள் சீக்கியப் படைவீரரிடையே மற்ற வகுப்பினர் பற்றிய வெறுப்பைத் தூண்டிப் பிரசாரம் செய்தார்கள்; அடிமைத் தனமும் கோழைத்தனமும் உடைய மன்னர் மரபுகளைத் தங்கள் பக்கம் திரட்டினார்கள்.

மேற்கில் பாஞ்சாலத்தில் புரட்சி பரவாமல் தடுக்க ஸர்ஹென்றி லாரன்ஸ், ஸார் ஜேம்ஸ் லாரன்ஸ் என்னும்