பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

95

படைத்தலைவர்கள் அரும்பாடுபட்டார்கள். அவர்கள் முயற்சியால் பாட்டியாலா, நாபா, ஜிந்து முதலிய பல நாட்டு மன்னர். பிரிட்டிஷார் கைப்பாவைகளாயினர். அவர்களும் இந்தியப் படைஞர்களும் புரட்சியை ஒடுக்குவதில் பிரிட்டிஷ் வீரரும் மலைக்கும்படி உழைத்தார்கள். அவர்கள் உதவியாலே தான் பாஞ்சாலத்தின் வீரம் இந்தியப் பெரும்புரட்சிக்குப் பயன்படாமல் போயிற்று. ஏனெனில், டில்லி வீழ்ச்சியின் பின் மேற்செல்லவிருந்த புரட்சிக்காரரை அவர்கள் மீண்டும் தில்லிக் கோட்டைக்குள் செல்லும்படி செய்தார்கள். மேற்கேயுள்ள புரட்சிக்காரர் தில்லியின் உதவி பெறாமலும், தில்லி செல்லாமலும் அவர்கள் தடுத்தார்கள்.

புரட்சி வெள்ளமும் குருதிப் பெருக்கும்

ரோஹில்கண்டு, காசிப்பகுதி, அலகாபாது, கான்பூர், ஜான்ஸி, அயோத்தி என்னும் இடங்களில் மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களுக்குள் புரட்சி வெள்ளம் பெருக்கெடுத் தோடிற்று.

ரோஹில்கண்டின் தலைநகரான பாரில்லியில் எதிர்பாரா வகையில் மே 31-ஆந் தேதி வெள்ளையர் வீடுகளில் தீப்பற்றியது. பீரங்கிப்படைத் தலைவரான பகத்சிங்கு என்பவரின் தலைமையில் படைப் பிரிவுகள் யாவும் ஒற்றுமையுடன் கிளர்ந்தெழுந்தன.ஆறு மணி நேரத்தில் நகரம் விடுதலை வீரர் கைப்பட்டது. அதன் பின்பு பேரரசர் சுற்றறிக்கைக்கு இணங்க, அவர்கள் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

காசியில் மே 23-ஆந் தேதியே புரட்சி கொழுந்து விட்டெரியலாயிற்று. அதன் பேரொளி சுற்றுப்புறங்களையும் தட்டி எழுப்பிற்று. அஸிம்கார், கோரக்பூர் என்னும் இடங்களி லுள்ள அரசியல் கருவூலங்களிலிருந்து காசிக்கு வந்து கொண்டிருந்த பணத்தை வீரர் சூறையாடினர். பிரிட்டிஷ் படை வீரர்களும், தளபதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், அச்சமயம் காசியில் வெள்ளையர் தலைவனாகச் சென்னையி லிருந்து வந்திருந்தவன் நீல் என்பவன். அவன் விரைவில் வெள்ளைப் படைகளைத் திரட்டி வந்து எழுச்சியைத் தற்காலிகமாக அடக்கினான். ஆனால், அவன் புரட்சி செய்த