இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
97
பிரிட்டிஷார் புரட்சிக்கனல் மூளுவதை அறிந்திருந்தனர். அச்சம் அவர்களைப் பிடித்தாட்டிற்று. ஆனால், நானா சாகிபுவின் வாய் பேசாத் திட்டங்களை அவர்கள் அறியவில்லை. ஆதலால், அவரையே தம் கருவூலத்துக்கும், தம் மக்களுக்கும் கோட்டைக்குள் காவலாக்கினார்கள். ஜூன் 1-ஆந் தேதி வரை பல திட்டங்கள் வகுத்தபின் அன்றிரவில் தலைவர்கள் கங்கை நீரைக் கையிலேந்திக் கொண்டு, விடுதலைக்குத் தம் உயிரையும் தத்தம் செய்வதாகக் சூளுறவு கூறினார்கள். ஜூன் 4-ந்தேதி போர் முறைப்படி நானா சாகிபு பிரிட்டிஷாரிடம் போரறிவிப்புச் செய்து, போர் தொடங்கிவிட்டதைக் காட்டப் பீரங்கிகள் முழங்கச் செய்தார். விரைவில் கான்பூர் முழுவதும், சுற்று வட்டாரங்களும் தேசியத் தலைவர்கள் ஆட்சிக்குள் வந்தன. திறமையான தலைவர்களற்ற மற்றப் பகுதியிலுள்ள வீரர்களைப் போல அவர்கள் தில்லிக்குச் செல்லவில்லை. விடுவித்த இடங்களில் விடுதலை ஆட்சியையே ஒழுங்கமைத்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்ததைவிட நல்ல அமைதியும் சட்ட திட்டங்களும் இவ்விடங்களில் நானாசாகிபுவால் வகுக்கப்பட்டன. வெள்ளையர்கள் நீண்ட
கோட்டைக்குள்ளிருந்த முற்றுகைக்காளானார்கள். இறுதியில் அவர்கள் சரணடைந் தார்கள். நானா சாகிபு அவர்களுக்குப் பாதுகாப்புடன் அலகாபாது செல்லும் உரிமை தந்திருந்தார். படகுகள் பல அவர்களை ஏற்றிச் செல்லக் காத்துநின்றன. ஆனால், அவர்கள் படகேற எண்ணிய நாள் ஜூன் 23-ஆந் தேதி. அதுவே பிளாஸிப் போரின் நூற்றாண்டு நிறைவு நாள் அன்று தேசிய எழுச்சி மாநிலமெங்கும் கொதித்தெழுந்து பொங்கிற்று. இது தலைவர்களின் திட்டத்தை மீற மக்களைத் தூண்டிற்று.
கான்பூர் நிகழ்ச்சி தில்லி விடுதலையைப் போலத் தாலைதூர மக்களைக் கவர்ந்திருந்தது. பல இடங்களில் விடுதலைப் போரை வெற்றிகரமாக நடத்திய படை வீரர்கள் கான்பூருக்கு வந்திருந்தார்கள். காசி,அலகாபாது படுகொலை களிலிருந்து தப்பி ஓடியவரும் அங்கே வந்து குழுமினர். 'பிளாஸி வீழ்ச்சிக்குப் பழி!' என்ற உணர்ச்சி எங்கும் அலை அலையாகப் படர்ந்தது. இதன் பயனாக நானா சாகிபுவின் பெருமித நடத்தையை மீறி மக்கள் படகுகளுக்குத் தீ வைத்தார்கள்.