பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

அப்பாத்துரையம் - 12

வெள்ளையர் ஆடவர் பெண்டிர் அனைவரும் தீக்கும், ஆற்று வெள்ளத்துக்கும் இரையாயினர். ஒரு சில வீரரே தப்ப முடிந்தது.

நானா சாகிபுவின் இளமைக்கால விளையாட்டுத் தோழியே இப்போது ஜான்ஸியின் இராணி லக்ஷ்மிபாயாய் ருந்தாள். கணவனிறந்த பின் அவள் தன் வளர்ப்புப் பிள்ளை தாமோதரராவை அரசனாக்க விரும்பனாள். பிரிட்டீஷார் இதனை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் வீரராணி 4-ஆந் தேதியன்று தானே தலைமை ஏற்றுப் புரட்சித் தீயில் குதித்தாள். மக்களும் உளம் கொதித்தெழுந்தார்கள். வெள்ளையராட்சி விரைவில் சரிந்தது. வெள்ளை அதிகாரிகளும் பிறருமாக நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தலைகள் வாளுக்கிரையாயின. தாமோதரராவின் பார்வையாளராக, வீரராணியின்

விடுதலையாட்சி நிறுவப்பட்டது.

அயோத்தியும் பீகாரும்

அயோத்தியில் ஸர் ஹென்றி லாரன்ஸ் புரட்சியைத் தடுக்க அனுப்பப்பட்டிருந்தான். 'புரட்சி இன்று எழும்! நாளை எழும்!’ என்ற பேச்சுக்கள் கேட்டு அவன் ஓயாது நடவடிக்கை எடுத்து எடுத்து ஏமாற்றம் அடைந்திருந்தான். எனவே, மே 31-ஆம் தேதியன்று, அவன் புரட்சி பற்றி அசட்டையாயிருந்துவிட்டான். அன்றிரவு அவன் அமைதியுடன் உணவு உண்ணும் சமயத்தில் அவன் மாளிகையே தீப்பற்றிக் கொண்டது. லக்னோ நகரெங்கும் ஒரே நாளில் புரட்சிக்காரர் கைப்பட்டது. ஒரு சில வெள்ளையர் மட்டும் நகரின் கோட்டையில் சென்று பதுங்கியிருந்தனர்.

இந்தியாவின் மற்றெந்தப் பகுதிகளையும்விட அயோத்தியிலே தான் புரட்சி மிகவும் உக்கிரமாகத் தாண்டவமாடிற்று. லக்னோவில் மட்டுமன்றி, சீதாபுரி, பஃகாபாது, பார்ஹெயிசு, ரூக்ஸஃபைஃஜா பாது என்னும் பல இடங்களிலும் ஆதிக்கத் தூண்கள் முறிந்து வீழ்ந்தன. வெள்ளையர் பல வகை அவதிக்கு ஆளாயினர். ஃபைஃஜாபாதில் புரட்சிப் பெருந்தலைவர்களுள் ஒருவரான மௌல்வி அகம்மதுஷா சிறைபட்டுத் தூக்குத் தண்டனைக்குக் காத்துக் கிடந்தார். ஆனால், அவரைத் தூக்கிலிடுமுன் புரட்சி மூண்டது. மௌல்வி சிறந்த வீரர் மட்டுமன்றி, சிறந்த எழுத்தாளரும் நயத்தக்க நாகரிக