இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
99
முடையவருமாவர். அவர் வெள்ளையர்களுக்குப் புரட்சி முற்ற மூளுமுன், ஓடிச் செல்லும்படி கட்டளையிட்டார்.
அயோத்தியிலுள்ள மன்னர் பலர் மேற்கிந்திய அடிமை மன்னரைப் போலத் தேசியத்துக்கு மாறாகவும் இல்லை. அதே சமயம் தோற்ற எதிரிக்குக் காட்டும் கருணையையும் வெள்ளையருக்குக் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ கோட்டையிலிருந்த பிரிட்டிஷ் தளபதியான ஹென்றி என்பவன், கான்பூரில் தன் இனத்தவருக்குக் கிடைத்த தோல்வியைப் போக்க முயன்று, வெளியேறித் தாக்குதல் தொடங்கினான். ஆனால், சின்ஹெட்டுப் போரில் பிரிட்டிஷ் படைகள் முழுதும் தோல்வியடைந்து, பீரங்கிகளை விட்டு விட்டு ஓடின.புரட்சிக்காரரின் தலைசிறந்த வெற்றிப் போர்களுள் இது
ஒன்று.
பீகாரில் புரட்சி இயக்கம் காலத்தால் பிந்தினாலும், தன்மையால் முந்திக்கொண்டது. அங்குக் கமிஷனராயிருந்த டெயிலர் முக்கியத் தலைவர்களுள் சிலரைத் தூக்கிலிட்டும், பலரைக் கைது செய்தும் புரட்சியை முளையிலேயே கிள்ளிவிட எண்ணினான். ஆயினும், பீர் அலி என்பவர் தலைமையில் ஜூலை 3-ஆம் தேதி புரட்சி தொடங்கிவிட்டது. பீர் அலி, புரட்சிக் காரரைத் தாக்கிய பிரிட்டிஷ் படைப் பிரிவின் தலைவனைச் சுட்டு வீழ்த்தினான். ஆனால், அவனும் கைதியாகித் தூக்கிலிடப் பட்டான். இது மீண்டும் பல இடங்களில் புரட்சியைப் பரவச் செய்தது. தனபுரியிலிருந்த படை கிளர்ச்சியிலிறங்கி வீர வெறியுடன் வெளியேறிற்று.
தனபுரிக்கு அருகிலுள்ள ஜகதீசபுரி மன்னன், குமாரசிங்கு என்பவன். அவன் எண்பது வயதுக் கிழவனானாலும், ளைஞருக்குமில்லாத வீரமும் போர்முறை அறிவும் உடையவன். தனபுரிப் படை வீரர்களுக்கு அவன் ஆதரவளித்து, அருகிலுள்ள அர்ராக் கோட்டையை முற்றுகையிட்டான். அவர்களுக்கு உதவியாகத் தனபுரியிலிருந்து வந்த படைகளைக் குமாரசிங்கு தன் ஒப்பற்ற குரங்குப் போர் முறையால் சிதறடித்தான்.ஆனால் விரைவில் புதிய பெரிய பிரிட்டிஷ் படை வந்தது. ஆகஷ்டு 2-ஆந் தேதி பீபி கஞ்சு என்னுமிடத்தில் நீண்ட