100 ||-
அப்பாத்துரையம் - 12
நேரம் தோல்வியை எதிர்பார்த்துப் போராடிய பின் பிரிட்டிஷார் வேகமாக எதிர்த்தனர்.குமாரசிங்கு பின்வாங்க வேண்டி வந்தது. பிரிட்டிஷார் அவன் அரசாகிய ஜகதீசபுரியைக் கைக்கொண்டனர். அரசிழந்ததுபற்றி வீர மன்னன் வருந்தவில்லை. அதனினும் பாரிய தாய் நாட்டைக் காக்கவே அவன் போரிலிறங்கினான்.
தில்லியின் விடுதலை முரசம்
1857-ஆம் ஆண்டில் புரட்சிக்காரருக்குக் கிடைத்த பெரு வெற்றிகளின் சிகரமாக தில்லிப் போராட்டம் விளங்கிற்று. மே 11- ஆம் தேதி விடுதலை பெற்ற அந்நகர், மூன்று மாத காலத்துக்கு மேல் விடுதலை ஆட்சியில் இருந்தது. இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் விடுதலை பெற்ற படைப் பிரிவுகளும் அவற்றின் தலைவர்களும் அங்கே நாள்தோறும் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். பலர் அரசியல் பொருட்குவைகளைக் கைப்பற்றி வந்து, பேரரசர் பகதூர் ஷாவின் காலடியில் வைத்தனர். பலர் எதிரியின் படைக்கலங்களை ஏராளமாகக் கைப்பற்றிக் கொண்டு வந்து சேர்த்தனர். படைக்கலங்களையும் உணவையும் சட்டை செய்யாமல் போராடிய தில்லி வீரர்களுக்கு இவற்றால் இன்னும் ஊக்கம் மிகுந்தது. நாள் தவறாமல் அவர்கள் ‘நீ முந்தி! நான் முந்தி!' என்று கோட்டைக்கு வெளியில் முற்றுகை யிட்டிருந்த எதிரிகளைத் தாக்குவதில் முனைந்தார்கள்.
கோட்டைக்கு வெளியேயுள்ள போராட்டங்களில் புரட்சிக்காரர் உயிரை வெறுத்து மும்முரமாகப் போரிட்டனர். ஆனாலும் சீக்கியரும் கூர்க்கரும் வெள்ளையருடன் நின்று, தமது வீரத்தை இந்திய விடுதலைக் கெதிராகப் பயன்படுத்தியதால், நிலைமை படிப்படியாக மாறுபட்டது.ஹிந்தன் ஆற்றங்கரையில் மே 30-ஆந் தேதி ஏற்பட்ட போராட்டத்தாலும், அதன் பின் ஜூன் 1-ஆந் தேதி பந்தல் கீ சராய்ப் போராட்டத்தாலும் பிரிட்டிஷார் தில்லிச் சுற்றுப்புறத்தை மட்டுமன்றி, நகரின் ஒரு சிறு பகுதியையும் கைப்பற்ற முடிந்தது. ஆனால், தில்லிக் கோட்டையை ஒரு நாளைக்குள் பிடித்துவிடலாம் என்று வெள்ளையர் கண்ட கனவு பலிக்கவில்லை. ஜூன் 16-ஆம் தேதி போர் பற்றிய ஆய்வுரைகளில் காலம் சென்றது. 18-ஆந் தேதிப் போரில் புரட்சிக்காரரே வெற்றி பெற்றனர்.வெள்ளையர் கவலைக்கு இடமேற்பட்டது. ஜூன் 23–