பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

101

ஆம் தேதி பிளாஸி நினைவு நாளாதலால், தில்லியில் அதற்கு முன் வந்து குவிந்த வீரர் அத்தனை பேரும், திரண்டு பெரும்போர் செய்தனர். பிரிட்டிஷார் பக்கமும் அடிமை அரசுகள் புதுப் படைகளை அனுப்பி உதவி வந்தன. அவ்வொரு நாள் போராட்டம் ஒரு பெரும் பாரதப் போராய் அமைந்தது.

பகத்கான் இப்போது தில்லிப் புரட்சியின் தலைவரானார். ஜூலையில் ஆங்கிலேயர் தாக்குதலுக்கு மாறாக, தில்லி வீரர் எதிர்த்துத் தாக்கத் தொடங்கினர். 9-ஆந் தேதி முதல் 15-ஆந் தேதி வரை வெள்ளையர் படுதோல்விகளுக்கும், பேரழிவுகளுக்கும் ஆளாயினர்.

பேரரசர் அழைப்பு விளம்பரம்

தில்லிப் பேரரசர் இச்சமயம் புரட்சிப் போராட்டத்தைத் தேசப் போராட்டமாக்க அரும்பாடுபட்டார். இந்திய மன்னர் அனைவரையும் தேசீயப் போரில் சேரும்படி அவர் அழைப்பு விடுத்தார்.“ஆங்கிலேயர்களை இந்நாட்டிலிருந்து துரத்தியபின் ஏன் தனி நலனுக்காக நான் ஆட்சி புரிய வேண்டுமென்ற அவா எனக்கு எள்ளளவும் இல்லை. பகைவர்களை எதிர்த்து இந்திய மன்னர் தங்கள் வாள்களை உருவுவார்களானால், வெற்றி பெற்றபின் என் உரிமை முழுவதையும் மன்னர்களடங்கிய ஒரு பேரவையிடம் நான் ஒப்புவிக்கத் தயங்கமாட்டேன்” என்று அவர் அறிவித்தார்.

பேரரசர் குரல் அன்று அடிமை மன்னர் தன்னலக் கோட்டையைத் தகர்த்து, அவர்கள் உள்ளத்தில் சென்று சேர்ந்திருந்தால், இந்திய வரலாற்றின் போக்கு வேறு வகையாய் இருந்திருக்கும். ஆனால், தில்லிக்கு இந்தப் புது வலு ஏற்படவில்லை. தவிர, பேரரசர் நல்லெண்ணம் காலங்கடந்த ஒரு பண்பாகவே அன்றைய நிலையில் இருந்தது. அதை நிறைவேற்றத் தக்க பெருந்தலைவர்கள், நானாசாகிபு, அஸிமுல்லாகான் போன்றவர்கள் மட்டுமே. அவர்கள் தில்லி வரவில்லை. மற்றத் தலைவர்களால் வீரர்களை ஊக்க முடிந்தது. ஆனால், தம்முள் அடிக்கடி ஏற்படும் சச்சரவுகளை அவர்களால் தடுக்க முடிய வில்லை. பிரிட்டிஷார் இதைப் பயன்படுத்திக் கொண்டனர்; நகரினுள் உட்பகைவரை அனுப்பிச் சூழ்ச்சிகளையும்