இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
103
தாண்டிப்பெருங்காவியங்கள் எழுந்திருந்திருக்கும் என்பது உறுதி. விடுதலை இந்தியாவின் காவியக் கவிஞர், ஓவியக் கவிஞர், வரலாற்றாசிரியர்களுக்கு இந்நிகழ்ச்சிகள் வற்றாத ஊற்றுக்களாய் இருக்கும் என்பது திண்ணம்.
விடுதலைப் போரை அடக்குவதைவிட, கோட்டைகளைப் பிடிப்பதைவிட, பிரிட்டிஷாருக்கு ஜான்ஸி ராணி, குமாரசிங்கு, மௌல்வி அகம்மது ஷா, தாந்தியாத் தோப்பே ஆகிய தனி மனிதர்களைக் கைப்பற்றுவது பெரும்பாடாய்ப் போயிற்று. ஏனென்றால் அவர்கள் இப்போது தனி மனிதர்களாயில்லை; படைவீரர் தலைவர்களாயும் இல்லை. அவர்கள் மக்கள் தேசிய உணர்ச்சிகளாகிய அலைகளில் மிதந்த புகழ்ப்படகுகளா- யிருந்தார்கள். அவர்கள் வீழ்ச்சி உறுதி. ஆனால், விழுமுன் பிரிட்டிஷார் ஆட்சி சந்தி சிரிக்கும்படியாயிற்று. அவ்வீரர் புகழ் ஓசை இந்திய மக்கள் உள்ளங்களில் மட்டுமன்றி, உலகமக்கள் உள்ளங்களிலும் வியப்பும் மலைப்பும் ஊட்டிற்று. போரைப் படைவீரர் கிளர்ச்சி என்று கூற முனைந்த பிரிட்டிஷ் படைவீரரும் ஆதிக்கவாதிகளும், பிரிட்டிஷ் அரசியல் மன்றத்தில் தங்கள் நிலைமையை விளக்க முடியாது திண்டாடித் திணறினார்கள்.
அரும்பெருஞ்செயல்களுக்குப் பின் 1858-ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம் 26-ஆந் தேதி குமாரசிங்கு, பிரிட்டிஷார் கையில் பிடிபடாமல், படுகாயங்களுடன் தம் அரண்மனையில் அரியாசனத்தில் வீற்றிருந்து உயிர் நீத்தார். அதன் பின்னும் நான்கு மாதம் கழித்தே கழித்தே பிரிட்டிஷார் நாட்டையும் அரண்மனையையும் கைப்பற்ற முடிந்தது. அக்டோபர் 19-ஆந் தேதியன்றே தேசியக் கொடி வீழ்த்தப்பட்டு, பிரிட்டிஷ் அடிமைக்கொடி அரண்மனையில் ஏற்றப்பட்டது.
மௌல்வி அகம்மது ஷா அயோத்தியில் மற்றொரு பகுதியில் தனிமனிதராய் நின்று, புரட்சியில் முனைந்த பொது மக்களுதவியுடன் போரிட்டனர். மே 11-ஆந் தேதி முதல் மூன்று நாள் இடைவிடாது போர் செய்து, அவர் துரோகிகள் சூழ்ச்சியால் காட்டிக்கொடுக்கப்பட்டுப் போரிலேயே வீழ்ந்தார்.
இந்தியாவின் வீரத்தாய் ஜான்ஸி ராணி லக்ஷ்மிபாய், தன் அரசுக்காக மட்டுமன்றி, பல அரசுகளைத் தூண்டி அவற்றின்