பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

105

பிரிட்டிஷ் ஆட்சி முறையின் சீர்திருத்தத்துக்கும் விடுதலை இயக்கத்தின் அரசியல் முறை மறு சீரமைப்புக்கும் 1857 புரட்சி வழி வகுத்தது. அதனுடன் இந்தியாவில் ஒரு பழைய ஊழி முடிவடைகிறது. நில உடைமை, சமயத்தலைமை, அரசியல் அடிமை ஆகிய முத்திறப் பழைமைகளின் ஆதிக்கம் பேரளவில் வலுவிழந்தன. தேசப்பற்று என்ற ஒரே உணர்ச்சியில் அவை பொதுமக்கள் வாழ்வுடன் ஒன்றுபட்டன. அடிமை மன்னர் மரபுகள் புரட்சி தாண்டி வாழ்ந்தன. தென்னாட்டில் பாஞ்சாலங்குறிச்சி தாண்டி அவை வலுப்பெற்றது போல, 1857 தாண்டியும் அவை வலுவடைந்தன. ஆனால், 1857க்குப்பின் அவர்கள் வலு, பிரிட்டிஷ் ஆட்சி வலுவுடன் இணைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் வீழ்ச்சியும் அவர்கள் வீழ்ச்சியும் 1947 ஆகஸ்டுடன் ஒருநிலைப்பட்டன.