இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
107
இந்தியாவை ஓர் உடலாகவும், பேரவையை அதன் உயிராகவும் எண்ணிப் பழகிவிட்டோம். இந்தியாவின் புதுப்புகழில் நாம் பேரவையின் புத்துருவைக் காண்கிறோம். பேரவையின் பத்தொளியில் இந்தியாவின் புதுப்புகழ் நிழலாடுகிறது. ஒன்றன் ஒளி, மற்றொன்றன் எழிலொளியாய், ரண்டும் ஒரே புகழொளியில் இணைந்து மிளிர்கின்றன.
ரு
பேரவையின் பிறப்பு, காலப்போக்கில் மேற்பரப்பில் தோன்றிய ஒரு தற்காலிக வளர்ச்சி அன்று, அது மாநில வரலாற்றின் கரு முதலிலிருந்தே முளையூன்றி மாநில வாழ்வு முழுவதும் வேரோடிய ஒரு தனிப்பெரு மரபின் வளர்ச்சி ஆகும். எனவே, நாம் அதன் முழு இயல்பையும் அறிய வேண்டுமானால், அதன் உடனடிச் சூழல் மரபுகளைக் கவனித்தல் மட்டும் போதாது. அம்மரபுகளைக் கடந்து அதன் தொலைக் காரணமான வரலாற்று மரபுகளையும் நாம் உணர வேண்டும்.
பேரவையின் சூழல் மரபுகள், 1857ல் வீறிட்டெழுந்த புரட்சியின் விளைவுகளே. இம்மாபெரும் புரட்சித் தீ, தானாக அடங்கவும் இல்லை; எளிதில் அடக்கப்படுவும் இல்லை. இஃது ரண்டாண்டுப் போராட்டத்தின் பயனாக, உலகின் புத்தம்புதிய ஆயுதங்களின் உதவியுடன், ஓர் உலக வல்லரசாலேயே அடக்கப்பட்டது. அது மட்டுமன்றி, இதை ஒடுக்கப் பல ஆண்டு நீடித்த அடக்குமுறைகள், நாகரிக உலகு கண்டிராத படுகொலைகள், கொடும்பழிகள் தேவைப்பட்டன. ஆனால், இந்தப் புறத்தோல்வி, மக்கள் அகத்துடிப்பை அகற்றவில்லை. அஃது உள்ளூறக் குமுறிக் கொண்டேயிருந்தது.
புறத்தீ அணைந்து, கரியும் புகையும் எங்கும் கவிந்திருந்தன. ஆனால், உள் வெப்பும் புழுக்கமும் எளிதில் ஓயவில்லை. ஆங்காங்கே மறைவில் புரட்சிக் கனல்கள் மூண்டு கொண்டிருந்தன. கொழுந்துவிட்டெரியும் புறத்தீயைவிட மிகுதியாக இந்த அக நெருப்புக்கு ஆட்சியாளர் அஞ்சினர். 1857க்கு முன்னிருந்த நிலையைவிட இது ஆபத்தானது என்று அவர்கள் கருதினார்கள்.
மக்கள் எதிர்ப்பை அவர்கள் சமாளிக்க முடியும். மக்கள் மனக்கசப்பையும் அகக்குமுறலையும் அவர்கள் சமாளிக்க முடியாது. எனவே, மக்கள் மனக் கசப்பைப் படித்த மக்களின்