108
அப்பாத்துரையம் - 12
ஒழுங்கமைதி வாய்ந்த அரசியலியக்கமாக மாற்றுவதல்லாமல், வேறு பாதுகாப்பான வழியெதுவும் ஆட்சியாளருக்குத் தென்படவில்லை. பேரவையின் பிறப்புக்கு வழி வகுத்த உடனடிச் சூழ்நிலை இதுவே.
இரு மரபுகள்
பேரவை இயக்கத்துக்கு மூலகாரணமான தொலை மரபுகள் இரண்டு: ஒன்று, விடுதலைப் போராட்ட மரபு; மற்றது, மக்கள் வாழ்வில் இயக்க அலைகளை எழுப்பிய புதிய நிலையங்களின் மரபு.
இம்மரபுகளுள் விடுதலைப் போராட்டமே உடனடிச் சூழல்களை உண்டு பண்ணிய மரபு ஆகும். அப்போராட்டம் அயலாட்சியை எதிர்த்த போராட்டம். அது வளர்த்த பண்புகள் அடிமை மரபை எதிர்த்த பண்புகள். ஆனால், அஃது அயலாட்சியும் அடிமை மரபும் வளருமுன் இருந்த தொன்முதல் விடுதலையின் புது மறுமலர்ச்சியேயாகும். ஆயினும், புதிய விடுதலை அப்பழைய விடுதலையின் மறு பதிப்பு மட்டுமன்று. அது பழைய விடுதலைக்குப் புத்துயிரையும் புதுப் பண்பையும் அளித்திருந்தது.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மாநிலத்தில் விடுதலை ஒளி வீசியிருந்தது. ஓரளவு மாநிலப் பண்பாட்டில் ஒற்றுமையும் நிலவியிருந்தது. ஆனால் ஒற்றுமை, வளமையற்ற ஒற்றுமை. விடுதலை, உயிர்ப்பும் வளர்ச்சிப் பண்பும் குன்றிய விடுதலை. இவ்விரு குறைகளுமே வடவிந்தியாவின் வாழ்வில் பல அயலார் படையெடுப்புக்களுக்கும் அயற்பண்புகளின் தலையீடுகளுக்கும் வழி வகுத்தன. இவற்றாலேயே வலிமை கெட்டது; ஒற்றுமை தவறிற்று; விடுதலை வீழ்ந்தது. ஆயினும், நாளடைவில் பழைய பேரரசுகள் மீண்டும் ஒற்றுமை நாடிப் போராடின. அவை ஓரளவு வெற்றிகளும் கண்டன. எனினும், அயலாட்சியிலேயே முழு வெற்றி கிட்டிற்று. ஏனெனில், அப்போதுதான் மாநில முழுவதிலும் புறவொற்றுமையேனும் நிலவிற்று.
விடுதலை இயக்கம் அயலாட்சியின் கருவிலேயே முதிர்ந்தது. அஃது அகவொற்றுமையையும் வலிமையையும்