பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

109

வளர்த்தது. அது புறவொற்றுமைக்கு உயிர் அளித்து நிலையான ஒற்றுமைப் பண்புக்கு வழிவகுத்தது.

ங்ஙனம் அடிமை மரபும் அயலாட்சியும் பழைய விடுதலையைப் புடமிட்டுப் புதியதொரு விடுதலைப்பண்பை வளர்க்கும் புடவோடுகளாயின. மேலீடாகப் பார்ப்பவருக்கு அவை விடுதலை மரபின் எதிர் மரபாகத் தோன்றலாம். ஆனால், பகலின் எதிர்ப் பண்பான இரவே, பகலுடன் சேர்ந்து ஒரு நாளாகிறது.பகலின் நிறைபண்பாக அஃது இயல்கின்றது.பகலில் உண்டு உழைத்த உயிரினர் இரவில் ஓய்வும் வளர்ச்சியும் பெறுகின்றது என்று உயிர்நூல் வல்லார் உணர்த்துகின்றனர். அடிமை மரபாகிய அரை ஒளியும் அயலாட்சியாகிய அரை இருளும் இங்ஙனம் புதிய விடுதலைப் பகலொளிக்கு வழி வகுத்தன. விடுதலை மரபு இங்ஙனம் அயலாட்சியும் அடிமை மரபும் கடந்து பண்டை விடுதலை வாழ்வில் வேரூன்றி வளர்ந்த ஒரு நீண்ட தொலை மரபு என்பதைக் காணலாகும்.

விடுதலைப் போராட்ட மரபை விடுதலை இயக்க மரபாக்க உதவிய பண்பு, மக்கள் இயக்கங்கள் நிலையங்கள் ஆகியவற்றின் மரபே. இதுவும் விடுதலை மரபைப்போல மிக்க பழைமை வாய்ந்ததே. இதன் எழுச்சி தளர்ச்சிகளை உபநிடத இயக்கத்திலும், பத்தி இயக்கங்களிலும், தாய்மொழி இயக்கங்களிலும் காண்கிறோம். தட்சயசீலம், நாளந்தா, காஞ்சீபுரம் ஆகிய இடங்களிலிருந்த பல்கலைக்கழகங்களும், மதுரையிலும் பிற நகரங்களிலும் இருந்து வந்த முத்தமிழ்ச் சங்கங்களும் இவ்வியக்கங்களுடன் வளர்ந்து தளர்ந்த நிலையங்கள் ஆகும். ஆனால், இத்தகைய இயக்கங்களும் நிலையங்களும் புது மலர்ச்சியடைந்து, புத்தூழிக்கு வழி வகுத்த காலம் 19-ஆம் நூற்றாண்டேயாகும். இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பிரமசமாஜமும் பிரமசமாஜ இயக்கமும் கிளர்ந்தெழுந்தன இந்நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரிய சமாஜ இயக்கமும் இராம கிருஷ்ண மடமும் பிரமஞான சங்கமும் தோன்றி, மாநிலத்தின் சமய சமுதாய அரசியல் வாழ்வுக்குப் புத்துயிரளித்தன. இவற்றுள் ஒவ்வொன்றும் பல வகையில் நேரிடையாகவும், மறை தூண்டு தலாகவும் பேரவையின் பிறப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவின.