அப்பாத்துரையம் - 12
110 ||- பிரம சமாஜ இயக்கமும், ராஜா ராம்மோகன்ராயும்
பிரமசமாஜ இயக்கம் காலத்தால் பேரவையின் பிறப்புக்கு மட்டுமன்றி, 1857 புரட்சிக்கும் முற்பட்டது. அதனைத் தோற்றுவித்த பெரியார் ‘ராஜா ராம்மோகன ராயர் ஆவர். 'புதிய இந்தியாவின் தந்தையார்' என்ற அருஞ்சிறப்புப் பெயருக்குப் பேரளவில் உரியவர் அவரே. அவருடன் அப்பெயருக்குப் போட்டியிடத்தக்க இக்காலத்துத் தலைவர் ஒருவரே. அவரே மகாத்துமா காந்தி அடிகள். இருபதாம் நூற்றாண்டின் ன் முற்பாதியை நாம் 'காந்தி ஊ ழி' என்று கூறலாமானால், அது போலவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியை நாம் 'இராம மோகனர் ஊழி' என்று கூறலாம்,
இராம மோகனர் பிரம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் மட்டும் அல்லர்; இந்தியாவிற்கு மேனாட்டுக் கல்வி முறையே சிறந்ததென்று மதித்து, அதற்காகப் போராடியவரும், உடன்கட்டை ஏறுவதைச் சட்ட மூலம் ஒழிக்க அந்நாளைய ஆட்சியாளர் தயங்கியபோது, அது வகையில் அவர்களை ஊக்கிய வரும் அவரே. மேலும், அவர் இளமை மணத்தை எதிர்த்து, மறு மணத்துக்கு ஆதரவு தந்தார். பல தெய்வ வணக்கம், மூடப்பழக்க வழக்கங்கள், குருட்டு நம்பிக்கைகள் ஆகியவற்றையும், சாதி வேறுபாட்டையும் அவர் தாக்கினார். இந்நோக்கங்களே பிரமசமாஜத்தின் நோக்கங்களாய் அமைந்தன; வணக்கத்தையும் புரோகிதர் ஆதிக்கத்தையும் எதிர்த்து, தூய கலப்பற்ற ஒரு தெய்வ வணக்கத்தையும் மனித இனச் சரிசமமான சகோதரத்துவத்தையும் அவ்வியக்கம் வற்புறுத்திற்று.
உருவ
மாநிலப் பெரும்புரட்சிக்கு முன் அதன் தலைவர்களுக்குள் ஒருவரான நானாசாகிபு மராட்டிய அரசனின் பேராளாகப் பிரிட்டன் சென்றிருந்தாரென்று முன்பே கூறியிருக்கிறோம். அது போலவே, இராம மோகனர் தில்லிச் சக்கரவர்த்தியின் பேராளாகப் பிரிட்டன் சென்றிருந்தார். அச்சக்கரவர்த்தியின் உரிமைகளுக்குப் பேராடிய அதே சமயம், இந்தியர் உரிமைகளுக்கும், புதிய இந்தியாவின் உரிமைகளுக்கும் அவர் போராடினார். இதற்காக அவர் பிரிட்டிஷ் அரசியல் மன்றின் தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்று, தாம் இறக்கும் வரை அதில் உறுப்பினராயிருந்து தொண்டாற்றினார். தேர்தலில் அவரை ஆதரித்த பிரிஸ்தல் நகரிலேயே அவர் இறுதி நாள் கழிந்தது.