பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

|| - -

அப்பாத்துரையம் - 12

துறையில் அவர் ஆற்றிய அரும்பணி பெரிது. அவர் பண்புகள் யாவற்றுக்கும் உரிமையாளரான அவர் புதல்வர் இரவீந்திர நாததாகூர், வங்கத்தின் கவிச் சக்கரவர்த்தி ஆவர். அவர் புகழ் உலக முழுவதும் பரந்துள்ளது. உலகக் கவிஞர்களுக்குத் தரப்படும் 'நோபெல் பரிசு' அவருக்குத் தரப்பட்டிருந்தது. தந்தையாரும் மைந்தரும் கண்ட கல்வித்துறைக் கனவுகளுக்குச் சான்றாக, சாந்தி நிகேதனமும் விசுவபாரதி பல்கலைக் கழகமும் இன்றும் நின்று நிலவுகின்றன.

பேரவை வாழ்வுக்குப் பிரமசமாஜம் நேரடியாகத் தந்த பரிசும் ஒன்று உண்டு: சமாஜத்தின் தலைவருள் ஒருவரான ஆனந்த மோகன் போஸ், பேரவையின் தொடக்கப் பணி முதல்வருள் ஒருவர். 1898-ஆம் ஆண்டுப் பேரவைக்கு அவர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

ஆரிய சமாஜம்

பிரமசமாஜ இயக்கம் அடிமை இருளை அகற்ற முடிந்தது. ஆனால், அஃது அவ்விருளை முழுதும் கலைக்க முடியவில்லை இவ்வகையில் பிரமசமாஜத்தைவிட ஓரளவு பரந்த வெற்றிகண்ட இயக்கம், ஆரிய சமாஜம் ஆகும். பிரமசமாஜ இயக்கம் வங்கத்தில் 1828ல் மலர்ந்தது. ஆரிய சமாஜம் பாஞ்சாலத்தின் செல்வர் தயானந்த சரசுவதி தந்த பரிசு. அது 1857ல் பம்பாய் நகரில் நிறுவப்பெற்றது. சமயச் சீர்திருத்தம், சமூகச் சீர்திருத்தம் ஆகிய துறைகளில் அது பிரமசமாஜக் கொள்கைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டதன்று. ஆனால், அது வேதங்களையே ஆதாரமாகக் கொண்டு, சைவ வைணவ ஆத்திக மரபில் நின்று அதற்கு விளக்கங்கண்டது. போலிப் பழைமையை நீக்க அது நல்ல பழைமைப் பற்றையே கருவியாகக் கொண்டதனால், மேனாட்டு நாகரிகத்தை இருகையேந்தி வரவேற்கவில்லை. பிற சமயம் சார்ந்தவர்களை மீண்டும் ஆரிய சமாஜ மூலம் வேத சமயத்துக்கு அது வரவேற்றதனால், தன் சமயப் பற்றையும் தன்னாட்டுப் பற்றையும் அது வளர்த்தது.

பெண்கள் கல்வி வகையிலும் கைம்பெண் மறுமண வகையிலும் ஆரிய சமாஜம் செய்துள்ள, செய்து வரும் சேவை பெரிது.