இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
115
உலகத் தலைமை நிலையத்தைச் சென்னையிலிருந்தே அவர் இயக்கி வந்தார்.
பேரவை இயக்கத்துக்குப் பிரமஞான சங்கம் தந்த தூண்டுதல் மிகமிகப் பெரிது! பேரவை தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கே பிரமஞான சங்கந்தான் பேரளவில் காரணம் என்பது தெரிகிறது. சென்னையில் நடைபெற்ற பிரமஞான சங்கத்தின் மன்றத்திலேயே அதுபற்றிய முதல் தீர்மானம் நிறைவேறியதாக அறிகிறோம். அவ்வாண்டிலேயே அதற்கான முயற்சிகள் வங்கத்தில் செய்யப்பட்டன. ஆனாலும், பிரமஞான சங்கம் தொடக்கத்திலிருந்தே அதன் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாயிருந்தது.
பிரம சமாஜத்தையும், ஆரிய சமாஜத்தையும் போலவே இராமகிருஷ்ண மடமும் பிரமஞான சங்கமும் கல்வித் துறையிலும் சமூகச் சீர்திருத்தத்திலும் மிகவும் முனைப்பாக வேலை செய்து வந்துள்ளன. இரண்டின் சார்பிலும் பல கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டு வளர்ச்சியடைந்துள்ள. அவற்றுள் மதனப்பள்ளியில் உள்ள பிரமஞான சங்கக் கல்லூரியும், காசிப் பல்கலைக்கழகமும் குறிப்பிடத்தக்கவை. காசிப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவிப்பதிலும், பேரவை இயக்கத்தைத் தோற்றுவிப்பதிலும், பேரவை இயக்கத்தை வளர்ப்பதிலும் திருமதி அன்னிபெஸண்டு மிகச் சிறந்த பங்கு கொண்டிருந்தார். 1917-ஆம் ஆண்டு காங்கிரஸுக்கு அவர் தலைமை வகித்தார். அவர் திலகருடன் ஒப்பான முதல்தரப் பேரவை இயக்க முதல் தலைவராயிருந்து தொண்டாற்றி வந்தார். பிறப்பால் இந்தியரல்லராயினும், பண்பால் அவர் முழுதும் இந்தியாவின் ஒப்பற்ற புதல்வியராய் அருந்தொண்டாற்றினார். தென்னாப்பிரிக்காவில் உழைத்த காந்தியடிகள் புகழை இந்தியாவில் வளர்த்து, அவரை இந்தியாவுக்கு வரவழைத்த பெருமையும் அவருடையதே.
தென்னிந்தியாவின் குரல்
மேற்குறிப்பிட்ட
இயக்கங்களில் உலகளாவிய
இயக்கமாகிய பிரமஞான இயக்கம் ஒன்று நீங்கலாக, மற்றவை வடநாட்டிலேயே பிறந்தவை. அவற்றின் வளர்ச்சியும் பெரிதும்