116
வட
அப்பாத்துரையம் - 12
டதிசையிலேயே இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் பிரமஞான சங்கம் தெற்கில் தலைதூக்கிய பின்புதான் மற்ற இயக்கங்களும் தெற்கே சிறிது சிறிதாகவாவது பரவத் தொடங்கின. ஆயினும், வடதிசை சார்ந்த இயக்கங்களுக்கு மூல முதலான பத்தி இயக்கம் தெற்கே தொடர்ந்து தனி வளர்ச்சி பெற்றது.7-ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் இலக்கிய வளர்ச்சியும், 12-ஆம் நுற்றாண்டு முதல் பிற தாய் மொழிகளின் வளர்ச்சியும் பெரிதும் இப்பத்தி இயக்கத்தைச் சார்ந்தவையாகவே இருந்தன. ஆனால், தமிழகத்தின் பத்தி இயக்கத்தில் உள்ளீடாகப் பண்டைத் தமிழகத்தின் சமூக சமயச் சீர்திருத்தக் கோட்பாடும் உலகக் குறிக்கோளும் கலந்தே வளர்ந்தன. திருவள்ளுவரின் சாதி சமய இன நாட்டு வேறுபாடற்ற பண்பும், சங்க இலக்கியத்தின் ‘ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும்', என்ற குறிக்கோளும் தமிழகப் பத்தி யக்கத்தைத் தனிப்படப் பண்படுத்தியிருந்தன. 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தாயுமானவர் கால முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இராமலிங்க வள்ளலார் காலம் வரை இவ்வுலகக் குறிக்கோளும் சீர்திருத்த ஆர்வமும் இடையறாது வளர்ந்தன.
20-ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் பிரம சமாஜம் போன்ற பகுத்தறிவியக்க அலைகள் வளர்ச்சியுற்றன. ஆனால், வடவிந்தியாவில் இவ்வியக்கங்கள் பொது மக்கள் இயக்கமாக வளர முடியவில்லை. ஒரு சில அறிஞர் தலைமையில் இது மக்களுக்கு விழிப்பூட்டுவதாக மட்டுமே அமைந்தது. அத்துடன் வடவிந்தியாவில் மாநிலம் பற்றிய கனவுகள் சீர்திருத்தப் பாதையில் நீடித்துச் செல்ல முடியவில்லை. தென்னிந்தியாவிலோ, அறிவியக்கங்களும் அவற்றைப் பின்பற்றி அரசியல் இயக்கங்களும் வடவிந்தியாவைப் போல மாநில அரசியற்கனவு காணவில்லை. அவை ஓருலகக்கனவும், சாதி சமய வேறுபாடு கடந்த சமுதாயக் கனவுமே கண்டன. பாரதியார் தேசீயப் பாடலில் மாநிலக் கனவுடன் இச்சீர்திருத்த ஆர்வமும் உலகக் கனவும் இணைவது காணலாம்.
சமயத்துறையில்
தாயுமானவர்,
வள்ளலார்
ஆகியவர்களைப் பின்பற்றி இருபதாம் நூற்றாண்டில் நாகை மறைதிரு மறைமலையடிகளார் பத்தி இயக்கம், தாய்மொழி இயக்கம், அறிவியக்கம் ஆகிய மூன்றையும் ஓரியக்கமாக்கினார்.