பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

117

தூய சைவசமயத் திருப்பணியுடன் தனித் தமிழரியக்கமும் ஒன்றுபட்டது. இவற்றின் பயனாக, இந்திய அரசியலில் ஒரு காந்தி ஊழி தொடங்கு முன்பே, தமிழகத்தில் ஒரு மறைமலை ஊழி நிலவிற்று. மறைமலையடிகளாரின் சமுதாயச் சீர்திருத்தக் கனவுகள் சமய மொழி எல்லை கடந்து, அரசியலையும் ஆட்கொண்டன. தென்னிந்திய அரசியல் இயக்கங்களில் அது பரவி, சாதி எதிர்ப்பு, மூடப் பழக்கவழக்க எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றம், பெண்கள் உரிமை ஆகியவற்றில் கருத்துத் தூண்டிற்று. காந்தியடிகளின் தாழ்த்தப்பட்டவர் பணிக்கும், இந்து முஸ்லிம் சமரச நோக்குக்கும் பேரளவில் தூண்டுதல் தந்தது இத்தென்னிந்தியாவின் குரலேயாகும். பேரவை இயக்கத்திலேயே தென்னிந்தியத் தலைவர்களுள் ஒருவரான திரு.வி. கலியாண சுந்தரனார், மறைமலையடி களாரின் ஒரு மாணவர். இச் சமரசப் பண்பை அவர் அரசியலிலும் சிறப்பாகப் பரப்பி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, முதன்முதலாகப் பேரவைக் கனவு கண்டது தென்னிந்திய பிரமஞான சங்கமே என்பதும்; காந்தியடிகளின் தென்னாப்பிரிக்கா இயக்கத்துக்கும், தலைவர் பெருந்தகை போஸ் தென்கிழக்காசியாவில் தொடங்கிய இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடல் கடந்த தமிழகமே பெரிதும் ஆதரவு தந்திருந்தது என்பதும்; காந்தியடிகளின் ஆக்கத்துறைப் பணிகளில் தமிழகமே முன்னணியில் நின்றதென்பதும் மனத்தில் வைக்கத்தக்கவை. திருமதி அன்னி பெஸண்டின் ‘தன்னாட்சி இயக்க'மும், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் ‘கப்பற்கழக இயக்க’மும், தொழிலாளரின் இயக்கமும், மறைமலையடி களாரின் தாய்மொழி இயக்கமும் தழிகத்துக்கே உரிய தனிச்சிறப்பான இயக்கங்கள் ஆகும்.

பேரவை இயக்கம் தொடங்குவதற்கும் வளர்வதற்கும் உதவிய சூழ்வளி மண்டலங்கள் இவை.

ஆட்சி மரபு

சமயசமூகத் துறைகளில் எழுந்த இவ்வியக்க அலைகள், அரசியல் மரபில் புக நீண்ட நாளாகவில்லை. 19-ஆம்