118
அப்பாத்துரையம் - 12
நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல அரசியல் நிலையங்கள் ஏற்படத் தொடங்கின. அரசியல் விழிப்புக் காரணமாகப் பத்திரிகைகள் பெருகின. ஆங்கிலப் பத்திரிகைகள் பெரிதும் ஆட்சியினர் சார்பில் இருந்தன. ஆனால், தாய் மொழிப் பத்திரிகைகள் நாட்டு மக்கள் உள்ளக்குமுறலை எதிரொலிக்கத் தொடங்கின.
இவற்றை ஆராயுமுன் ஆட்சி மரபை நாம் கவனிக்க வேண்டும்.
வாணிகக் கழகத்தின் தலைமையில் பிரிட்டிஷ் ஆதிக்கம் இந்தியா முழுவதும் பரவும் முன்பே, அவ்வாட்சி மாநில அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. தொடக்கத்தில் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய முத்திசைகளில் மூன்று ஆட்சித் தலைவர்கள் தனித்தனி நின்று வாணிகக் கழகத்தின் ஆட்சியை நடத்தி வந்தார்கள். ஆனால், 1773-ல் பிரிட்டிஷ் அரசியல் மன்றில் நிறைவேற்றப்பட்ட ஒழுங்கு முறைச் சட்டம், ஒரே ஆட்சி முதல்வரின் கீழே மூன்று மாகாணங்களையும்
2
ணைத்தது. கல்கத்தா இந்தியாவின் தலைநகரம் ஆயிற்று. அத்துடன் பிரிட்டனிலேயே வாணிகக் கழகத்தின் பொறுப்பி லிருந்த ஆட்சி, ஓர் ஆட்சிக் குழு வசம் ஒப்படைக்கப்பட்டது. இது முதல் பிரிட்டிஷ் மன்றம் பத்தாண்டுக்கொரு முறை இந்திய ஆட்சி முறையைத் தேர்ந்தாய்ந்து சீர்திருத்த முற்பட்டது.
இராம மோகனர் முயற்சியால் இந்தியாவில் ஆங்கிலக் கல்வி பரவி வந்தது. கிறிஸ்தவ சமயப்பணியாளர், கல்வி நிலையங்களில் அக்கறை காட்டி, மக்கள் கல்வியை வளர்த்து வந்தனர்.1833-இல் இந்திய ஆட்சி முறையைச் சீர்திருத்தி ஒரு புதிய சட்டம் ஏற்படுத்தப்பட்டது. வாணிகக் கழகத்தின் ஆட்சி உரிமைகள் பெரிதும் குறுக்கப்பட்டன.பணித்துறைகளில் சாதி, சமய, இனவேறுபாடும், பால் வேறுபாடும், நிறவேறுபாடும் இல்லாமல், வெள்ளையரைப் போலவே இந்தியருக்கும் இடம் இருக்கவேண்டுமென்று இச்சட்டம் கொள்கை வகுத்தது. நடைமுறையில் இக்கொள்கை வெற்றியடையவில்லை யானாலும், காலநிலை கடந்த இக்கொள்கையின் வெற்றி ராஜா ராம மோகனரின் அருந்தொண்டுகளின் மதிப்பை நமக்குக் காட்டுகிறது.