பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

119

1853ல் இந்திய உள் நாட்டு உயர்பணிகளுக்கான போட்டித் தேர்வு இங்கிலாந்தில் ஏற்படுத்தப்பட்டது. அதில் கலக்கும் உரிமை இந்தியருக்கும் கொள்கையளவில் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், 1833 சட்டமும் 1853 சட்டமும் இந்தியருக்கு நடைமுறையில் மிகவும் குந்தகமான சூழ்நிலையை உண்டாக்கியிருந்தன. இந்நிலையிலும் தேர்வுகளில் இந்தியர் சிறப்புடன் வெற்றி பெறுவது கண்டு ஆட்சிக் குழுவின் பின்னணியிலிருந்த பிற்போக்காளர்கள் போட்டியிடுபவர்களின் வயதெல்லையைக் குறைக்க முற்பட்டனர், தொடக்கக் காலப் பேரவைகள் இந்த ‘ஒரு குலத்துக்கு ஒரு நீதியை' வன்மையாகக் கண்டித்தன.

1857 புரட்சி கழிந்த அடுத்த ஆண்டிலேதான் ஆட்சியாளர் மனப்பான்மையிலும், போக்கிலும் ஆட்சி முறையிலும் பெருத்த மனமாற்றம் ஏற்பட்டது.வாணிகக் கழக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பிரிட்டரினின் முடியரசே இந்தியாவின் ஆட்சியை நேரடியாக ஏற்று இந்தியா பேரரசாயிற்று.1773-ஆம் ஆண்டுச் சட்டப்படி வங்க ஆட்சியாளர் இந்திய ஆட் முதல்வராயிருந்தார். இப்போது அவர் ஆட்சி முதல்வராக மட்டும் அன்றி, அரசர் ஆட்பெயர் என்ற பொறுப்பும் ஏற்று, இந்திய மன்னர் மீதும் மேலுரிமை பெற்றார். வாரன் ஹேஸ்டிங்ஸ் முதல் ஆட்சி முதல்வரானது போல, 1858ல் கானிங்கு பெருமகனார் முதல் முன்னர் ஆட்பெயரானார்.1877ல் பிரிட்டன் அரசியாரான விக்டோரியா அரசியார் இந்தியாவின் பேரரசியார் என்னும் பட்டம் ஏற்றார். பிரிட்டனின் முடியரசு இந்தியாவின் பேரரசு ஆயிற்று.

1858ல் பல்கலைக்கழகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சென்னை, பம்பாய், கல்கத்தா நகரங்களில் இந்தியாவின் முதற் பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டன.

1861லும் 1863லும் நிறைவேற்றப்பட்ட சீர்திருத்தச் சட்டங்களால் இந்திய மாகாணங்களிலும் சட்ட மன்றங்களும் நீதி மன்றங்களும் நிறுவப்பட்டன. ஆனால், இவற்றின் உறுப்பினர்கள் ஆட்சித் தலைவர்களால் அமர்த்தப்பட்டவர்களாகவும், பணித் தொடர்புடையவர்களாகவுமே இருந்தார்கள். குடியாட்சி