120 ||-
அப்பாத்துரையம் - 12
அமைப்பின் புறச் சின்னங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பொறுப்பாட்சி ஏற்படவில்லை. பொறுப்பாட்சித் தத்துவமும் உணரப்படவில்லை.
1875க்குள் தாய்மொழிப் பத்திரிகைகள் பெரிதளவு வளர்ச்சியடைந்துவிட்டன. சென்னையில் சுதேசமித்திரனும் அதை அடுத்து ஆங்கிலத்தில் இந்துவும் இந்தியாவில் நடத்தப்பட்ட சிறந்த தாய் மொழி ஆங்கிலமொழிப் பத்திரிகைகள் ஆயின. அயல் மொழிப் பத்திரிகைகள் பல வெள்ளையரால் நடத்தப்பட்டும், பிற்போக்காளர் ஆட்சியாளரைத் தூண்டி அவற்றுக்குப் பெருந்தொல்லை தந்து வந்தனர். இது தளர்த்தப்பட்ட பின்னும் தாய்மொழிப் பத்திரிகைகள் மீது கடுந்தடைகள் ஏற்பட்டிருந்தன. லிட்டன் பெருமகனார் போன்ற மாநில ஆட்சித்தலைவர் காலங்களில் இத்தடைகள், மக்களிடையே பெரு மனக்கொதிப்பை உண்டு பண்ணின. ஆனால், ரிப்பன் பெருமகனார் ஆட்சியில் பத்திரிகைகளுக்குத் தடைகள் அகற்றப்பட்டிருந்தன. அத்துடன் திணைநில ஆட்சி நிலையங்கள் நிறுவப்பட்டன. இடைத்தர, தொடக்கக் கல்வி நிலையங்கள் பெருக்கப்பட்டன. ஆட்சியின் பின்னணியிலிருந்த பல பிற்போக்காளர்களின் எதிர்ப்பைச் சமாளித்து, ரிப்பன் பெருமகனார் செய்த இச்சீர்திருத்தங்கள் இந்தியர் பேராதரவைப் பெற்றன. 'பெருமகன் ரிப்பன் எங்கள் அப்பன்.' என்ற பழஞ்சொல் இக்கால மக்கள் உளநிலையை நமக்கு நன்கு எடுத்துக்காட்டுகிறது.
அரசியல் நிலைய மரபு: பேரவையின் தோற்றம்
ஆட்சி முறைச் சீர்திருத்தங்களும், கல்வி முன்னேற்றமும், 1857 புரட்சியின் விளைவுகளும், நாட்டில் பொதுவாக ஏற்பட்டிருந்த பஞ்சம், வறுமை ஆகியவற்றின் சூழல்களும் அரசியல் நிலையங்களுக்குப் பேராதரவாயிருந்தன. 1851லேயே வங்கத்தில் பிரிட்டிஷ் இந்திய சங்கம் நிறுவப்பட்டிருந்தது. பம்பாயில் பம்பாய் மாகாணசங்கமும் கிழக்கிந்திய சங்கமும் தாடங்கி நடத்தப்பட்டன. 1881ல் சென்னையில் சென்னை மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இவை அவ்வம் மாகாணத்தின் அரசியல் பிரச்சினைகளில் கருத்துச் செலுத்தி வந்தன.