பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

121

இந்திய மாகாண சங்கங்களை ணைத்தோ, இந்தியா முழுமைக்கும் புதிதாகவோ, ஓர் இந்திய மாநில அரசியல் சங்கம் இருத்தல் வேண்டும் என்ற புதிய கருத்து, சென்னையில் 1884ல் கூடிய பிரமஞானப் பேரவையில் வெளியிடப்பட்டிருந்தது. கால நிலைக்கேற்ற இக்கருத்துரை, மிக விரைவில் பரவியிருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை. ஆனால் பொதுமக்கள், பெருமக்கள் கனவார்வத்தைவிட, ஆட்சியாளர்களிடையேயும் இந்தியாவின் வெள்ளை நண்பர்களிடையேயும் முன்னேற்றக் கருத்துடையவர் களின் கனவார்வத்தை இது மிகுதியாகக் கிளறிற்று என்பதை அறிகிறோம். சிறப்பாக ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்ற பெரியார் உள்ளத்தில் இது மிகுதியான து மிகுதியான கனவலைகளை எழுப்பிற்று. அவரே, பிற்காலங்களில் இதுபற்றிய பல விவரங்களை நமக்குத் தந்திருக்கிறார். பேரவையின் பிறப்புப் பற்றிய பல சுவையான செய்திகளை நாம் இதனால் அறிகிறோம்.

ஏ.ஓ.ஹியூம் 1857 புரட்சிக் காலத்தில் அதை அடக்க உதவிய வெள்ளையருள் ஒருவராகவேயிருந்தார். ஆயினும், ஒரு நாட்டின் உரிமைக் கிளர்ச்சியைப் படைக்கலங்களால் அழித்துவிட முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார், பிரிட்டனின் ஆட்சியை நல்லாட்சியாக்குவது மட்டும் அதற்கு வலுத் தராது

என்று அவர் கருதினார். இந்தியரிடையே அரசியல்

விழிப்பையூட்டி அவர்கள் கருத்துரைகளையும் துணை உரைகளையும் ஆதரவாகக் கொண்டு, படிப்படியாகப் பொறுப்பாட்சிக்கு வழி வகுக்க வேண்டுமென்பதே அவர் அவாவாயிருந்தது. ஆயினும், தொடக்கத்தில் அவர் கூட அரசியற்செய்திகளுக்கு மாகாண சங்கங்களே போதுமென்றும்; முழு இந்தியாவுக்குச் சமுதாய கல்விச் சீர்திருத்தக் காரியங்களில் கருத்துச் செலுத்தி மாகாண சங்கங்களை இணைக்கும் ஒரு பொது அவை இருத்தல் போதுமென்றும் எண்ணியிருந்தார்.

L

1885ல் ஆட்சி முதல்வராயிருந்த டவ்வரின் பெருமகனாரே, ஏ.ஓ.ஹியூமின் தொடக்கக் கருத்தை மாற்றினார் என்பது கூறப்படுகிறது. ஹியூம் இச்செய்தியைப் பிற்காலத்திலேதான் வெளியிட்டார். ஏனெனில் டவ்வரின் பெருமகனா முன்னேற்றப் போக்கை ஆட்சித் துறையின் பின்னணியிலிருந்த