பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

அப்பாத்துரையம் - 12

பிற்போக்காளார் பலர் எதிர்த்துத் தாக்கக் காத்திருந்தனர். நமக்கு இன்று இந்நிலை மிகவும் புதுமை வாய்ந்ததாகவே தோற்றக்கூடும். இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை நடத்திய பேரவைக்கு வெள்ளையரான ஹியூமே தந்தையாராகக் கருதப்பட்டார் என்பது வியப்புக்குரியது. ஆட்சி முதல்வராகிய டவ்வரின் பெருமகனாரே அதை முதல் தர அரசியல் நிலையமாக்கக் காரணராயிருந்தார் என்பது இன்னும் பெரிய புதிராகவே தோற்றத்தக்கது. ஆனால், ஆட்சி முதல்வர் இதற்குக் கூறிய காரணங்கள், அவரது தொலைநோக்கையும் காலங்கடந்த முன்னேற்ற ஆர்வத்தையும் நமக்குக் காட்டுகின்றன:

"இந்தியாவின் முழுப்பேரவை ஒரு சமூகச்சீர்திருத்தப் பேரவையாக மட்டும் இருந்தால், அதனால் ஒரு சிறிதும் பயன் ஏற்படாது. இங்கிலாந்தில் அரசியலாருக்கு மக்கள் அரசியல் கருத்தின் போக்கை எடுத்துக் காட்டுவது மன்னரின் எதிர்க்கட்சி. இந்தியாவில் அத்தகைய எந்தக் கட்சியும் இருக்க இ டமில்லை. 'ஆட்சி முறையையும் ஆட்சி நடைமுறைகளையும் பற்றி இந்திய அரசியல்வாதிகள் என்ன நினைக்கிறார்கள்? எந்த அளவுக்கு அவை அவர்கள் ஆதரவையோ போற்றுதலையோ பெற்றிருக்கின்றன? எந்த அளவுக்கு அஃது அவர்கள் வெறுப்புக்குரியது?' என்பன போன்ற செய்திகளைப்பற்றி நாம் எதுவும் அறிய வழியில்லை. இந்திய அரசியல்வாதிகளைத் தன்னகங்கொண்ட ஒரு பேரவையே இந்நிலைகளை அறிவித்து ஓரளவு எதிர்க்கட்சியினர் கட மையை ஆற்றும்.”

ஆட்சி முதல்வரின் இந்தக் குறிக்கோள், விடுதலை பெற்றுவிட்ட இன்றைய புதிய இந்தியாவுக்குக்கூட ஒரு நல்ல அறிவுரை ஆகும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக ஆட்சியாளர் மக்கட்குமுறலை மிதவாத அரசியற்போக்கில் திருப்புவதற்கே பேரவையைத் தோற்றுவிக்க விரும்பினர் என்பது உண்மை யானாலும், அச்சூழலிடையேகூடத் தொலைநோக் குடைய தனிமனிதர் வெள்ளையரிடையேயும் ஆட்சித் துறையினரிடையேயும் இருந்தனர் என்பதை இச்செய்தி

காட்டுகிறது.