பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

முதற் பேரவை

123

1885 மார்ச்சு மாதத்தில் ஹியூம், இந்தியாவிலுள்ள பல அரசியல்வாதிகளையும் கல்கத்தாவில் கூட்டி, டவ்வரின் பெருமகனாருடன் தாம் தனிப்படக்கலந்து செய்து தம் முடிவைத் தரிவித்து, அவர்கள் கருத்துரைகளை வரவழைத்தார். அனைவரும் அவர் முடிவை ஆர்வத்துடன் வரவேற்றனர். அவ்வாண்டு டிஸம்பர் மாதத்திலேயே இந்தியாவின் எல்லா மாகாணங்களிலுமிருந்து பிரதிநிதிகளை அழைத்து, ஒரு பெரிய மாநாடு கூட்டுவதென்று முடிவு செய்யப்பட்டது. ஆண்டு தோறும் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள முக்கிய நகர மொன்றில் கூடுவதென்பது தீர்மானிக்கப்பட்டது. முதலாண்டு பூனாவில் கூடுவதாகவே ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், றுதி நேரத்தில் பூனாவில் தொத்து நோய் நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிந்ததனால், பரபரப்புடன் பம்பாயில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்திய மாநிலத்தில் விடுதலை இயக்கத் தலைமை நிலையமாகிய மாநிலப் பேரவை இங்ஙனம் 1885-ஆம் ஆண்டு, டிஸம்பர் மாதம், 28-ஆம் நாள் பம்பாயில் கூடிற்று. உமேஷ் சந்திர பானர்ஜி அதன் தலைவராயிருந்து, தலைமைப் பேருரையாற் றினார். பல மாகாணங்களிலிருந்தும் 72 பிரதிநிதிகள் வந்திருந் தார்கள். மூன்று நாட்கள் பேரவை மாநாடு நடைபெற்றுப் பல தீர்மானங்கள் நிறைவேறின. அது முதல் கிட்டத்தட்ட ஆண்டுதோறும் பேரவை இந்தியாவின் விடுதலை இயக்கப் பொறுப்பையும் இந்தியர்கள் வருங்கால வாழ்க்கைப் பொறுப்பையும் ஏற்றுப் பணியாற்றி வந்துள்ளது.

பேரவை 1885இல் பிறந்து, 1947 வரை ஆற்றிய அருந்தொண்டுகள் இப்போது இந்தியாவின் வரலாற்றில் ஒரு முக்கியப் பகுதியாகிவிட்டது. பொறுப்பாட்சிகூட இல்லாத மாநிலத்தில் இது 62 ஆண்டு உழைப்பின் பயனாக முழு நாட்டு விடுதலையையே கொண்டு வந்துவிட்டது. 62 ஆண்டு நீடித்த இப்பேரவையின் வரலாற்றை நாம் நான்கு ஊ ழிகளாகப் பிரிக்கலாம். முதல் ஊழி, பேரவையின் மன்றாடும் பருவமாகவே இருந்தது. படிப்படியாக அதில் மக்கள் குரல் வளர்ந்து வந்தது.