பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(124)

அப்பாத்துரையம் - 12

இப்பருவம்1885லிருந்து 1907 வரை நீடித்தது. அடுத்த ஊழியை நாம் 'வங்கப் புரட்சி ஊழி' என்னலாம். இது 1907 லிருந்து 1919 வரை உள்ள காலம். இப்பருவத்தில் வங்கம் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தது.மராட்டிய சிங்கமான திலகர் புரட்சிக்கொடி தூக்கினார். தமிழகத்தின் தனிப் பெருங்குரல் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் உருவில் மாநில முழுவதையும் கவர்ந்தது.