பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

அப்பாத்துரையம் - 12

இருபதினாயிவருக்கு மேற்பட்டிருந்தனர். அரங்கிலாடிய பேரவைச் செல்வி, இருபதாவது ஆண்டு நிறையுமுன் அம்பலத்திலாட வந்துவிட்டாள். பேரவைக் கூட்டம், சிறு சங்கக் கூட்டமாய் இருந்த நிலைமாறி, பேரவை நகரங்களாகவும் பெருநகரங்களாகவும் காட்சி தந்தது. பேரவைப் பந்தல்கள் பேரவை நகரங்கள் என்றே வழங்கப்பட்டன.மக்கள் நெஞ்சத்தில் இடம் பெற்ற அவ்வக்கால வீரர் அல்லது ஊழியரின் பெயரால் அவை அன்பார்வத்துடன் வழங்கப்பட்டன.

பேரவையில் தொடக்கத்திலிருந்தே இந்துக்களைப் போல முஸ்லிம்களும், பிற வகுப்பினரும் பங்கு கொண்டிருந்தனர்.1885ல் பேரவை பிறந்த ஆண்டிலேயே முஸ்லிம் நடுத்தர வகுப்பின ரடங்கிய ஓர் அரசியல் நிலையம் ஏற்பட்டிருந்தது. இரண்டாவது பேரவைக் கூட்ட ஏற்பாடுகளை அந்த முஸ்லிம் நிலையமே முன்னின்று நடத்தியதென்பதை அறிகிறோம். விரைவில் அந்நிலையம் பேரவையுடன் இரண்டறக் கலந்துவிட்டது.இதன் பயனைப் பேரவைக் கூட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் விரைந்த முன்னேற்றம் எடுத்துக்காட்டுகிறது. முதல் பேரவையில் முஸ்லிம் பிரதிநிதிகள் இரண்டு பேர். இரண்டாவது ஆண்டில் இத்தொகை 33 ஆயிற்று. ஆறாவது ஆண்டில் மொத்தம் 702 பிரதிநிதிகளில் முஸ்லிம் பிரதிநிதிகள் 156 பேர். அதாவது,100க்கு 22 விழுக்காட்டினர் இருந்தனர்.

L

தேசப் பிரதிநிதித்துவ சபை: காந்தியடிகளின் சான்றுரை:

பேரவை ஒரு வகுப்புவாத நிலையமாகவோ, குறுகிய பிரதிநிதித்துவ முடையதாகவோ வளரவில்லை; முழுத் தேசிய நிலையமாகவே வளர்ந்தது. ஐம்பதாண்டு பேரவை வாழ்வுக்குப் பின்னும் அதன் பிரதிநிதித்துவத்தைப் பற்றிக் குறை கூறிய ஆட்சியாளர் முன்னிலையில் காந்தியடிகள் வீறுடன் சாற்றிய வாய்மொழியுரைகள் இதனை வலியுறுத்துகின்றன.

“மாநிலத் தேசியப் பேரவை அதன் பெயருக்கேற்றபடி ஒரு முழுத் தேசிய அவை ஆகும். அது எந்தத் தனிப்பட்ட சமூகப் பிரிவின் பிரதிநிதித்துவ சபையோ, தனிக்குழு நலன்களின் சபையோ அன்று. அது முதன் முதல் ஓர்