இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
127
ஆங்கிலேயர் மூளையில் முளைத்ததென்பதில் நாம் தனி மகிழ்வெய்துகிறோம்! ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவரே பேரவையின் தந்தையார் என்று போற்றப்படுகிறார். பிரோஸ்ஷா மேத்தா, தாதாபாய் நௌரோஜி என்னும் இரு பார்ஸிப் பெருமக்களால் அது பாலூட்டி வளர்க்கப்பெற்றது. தாதாபாய் நௌரோஜியையே இந்தியா தன் முதுபேரறிஞராக மகிழ்வுடன் ஏற்றுப் பெருமை கொண்டது. தொடக்கத்தி லிருந்தே முஸல்மான்கள், கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகிய எல்லா வகுப்பினரும் மதத்தினரும் கோட்பாட்டினரும் அதில் கலந்து கொண்டிருந்தனர். காலஞ் சென்ற பத்திருதீன் தயாப்ஜி பேரவையுடனே தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்த பெரியாருள் ஒருவர். முஸல்மான்களும் பார்ஸிகளும் அதில் தலைமைத் தவிசேறி அமர்ந்துள்ளனர்."
பேரவையின் தலைமை மரபு
சென்னையில் (1887,1894,1898, 1903 ஆக) நான்கு முறையும், கல்கத்தாவில் (1886, 1890, 1901, 1906 ஆக) ஐந்து முறையும், பம்பாயில்(1885,1889,190 ஆக) மூன்று முறையும் பேரவை கூடிற்று. தவிர, அலகாபாதில் மூன்று முறையும், இலாகூரில் இரண் முறையும். நாகபுரி, இலட்சுமணபுரி, பூனா, அமரோட்டி, காசி என்னும் இடங்களில் முதல் தடவையாக ஒவ்வொரு முறையும் பேரவை நடைபெற்றது.
தலைவர்களுள் தாதாபாய் நௌரோஜி மும்முறை (1886, 1903, 1906) பேரவையின் தலைவராயிருநதார். அவர் பேரவையின் மன்றாடும் குரலுக்கு ஊக்கம் தந்து, அதைப் படிப்படியாக உரிமைக்குரல் பெறும் வரை வளர்த்தவர். காந்தியடிகளின் ஆர்வமும் பெருமிதமும் கலந்த வீரப் பாராட்டுக்குரிய முதற் பெருந்தலைவர் அவரே. அவர் 1906 பேரவையில் காங்கிரஸின் புதிய குரலை எழுப்பி, அந்நிலையத்துக்குப் புத்துயிரூட்டினர். வெளிநாட்டுப் பொருள்களை விலக்கி நாட்டுத் தொழிலும் வாணிகமும் வளர்க்கும் சுதேசி முறை பற்றி முதல் முதல் குரலெழுப்பியவர் அவரே.