பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

129

தொடக்கத்தில் பிரிட்டிஷாரின் நல்லெண்ணத்தில் தலைவர்கள் மிகுந்த நம்பிக்கை காட்டி வந்தார்கள். “ஆங்கில மக்களுக்கு ந்தியாவின் நிலைமையை உள்ளவாறு விளக்கி, இந்திய மக்களின் கனவார்வங்களையும் அவா ஆர்வங்களையும் தெரியப்படுத்திவிடுவது போதும். இந்தியாவிற்கு அவர்கள் பொறுப்பாட்சி வழங்கிவிடுவது உறுதி," என்று அவர்கள் கருதியிருந்தார்கள்.1906 வரை பத்திமனப்பான்மையிலுள்ள இந்த வேண்டுகோள்களே விடுக்கப்பட்டு வந்தன. ஆயினும், முதற்பத்தாண்டுகளுக்குப் பின் சொல்லின் பின்னணியிலுள்ள தொனி மாறுபடுவது காண்கிறோம். பெருமக்கள் சபையாயிருந்த பேரவை, ப்போது படிப்படியாக நாட்டின் மிகப் பெரும்பாலாரான பொதுமக்களின் சபையாகி வந்தது. குரல் வரவர உரிமைக்குரலாயிற்று. தன்னம்பிக்கை வளர்ந்தது. 'நாம் மன்றாட வேண்டுவதில்லை; முறைப்படி கேட்க வேண்டும்; பின் வாதாட வேண்டும்; தேவைப்பட்டால் இறுதியில் போராடவும் தயங்கக் கூடாது' என்ற எண்ணம் பெருகிற்று.

பேரவையின் பிறப்புக் காலத்தில் அதற்கு வெளியே தனித்தனி குமுறிய புரட்சிக் கனல்கள் அவியவில்லை. அவை பொதுமக்களின் புதிய பிரதிநிதிகளுடன் மெல்ல உள்ளே வந்து விட்டன. பல பிரதிநிதிகளின் பேச்சிலும், சுரேந்திர நாதர், தாதாபாய் நௌரோஜி ஆகிய பெருந்தலைவர்களின் தலைமையுரையிலும் அதன் எதிரொலியைக் கேட்கிறோம்.1906- ஆம் ஆண்டை அடுத்து வருடந்தோறும் அம்முழக்கம் படிப்படியாக உயர்கின்றது.1906இல் தாதாபாயின் தலைமையுரை பழைய பேரவைக்கு விடை கொடுத்துப் புதிய பேரவைக்கு அழைப்பு விடுப்பது போல அமைந்துள்ளது. 'தன்னரசு (சுயராஜ்ய) என்ற சொல்லைப் பேரவையுரையிலேயே முதன்முதலாக இவ்வாண்டிலேதான் கேட்கிறோம்.

ஆட்சியாளர் எதிர்ப்பு

ல்

தொடக்கத்தில் ஆட்சித் தலைவர்களும் ஆட்சியாளர்களும் பேரவையில் மிகவும் ஆர்வம் காட்டியிருந்தார்கள். இரண்டாவது பேரவைக் கூட்டத்தில் சென்னை ஆட்சித் தலைவர் பெண்ட்லண்டு பெருமகனார் கலந்து கொண்டிருந்தார். அடுத்த