130) ||-
அப்பாத்துரையம் - 12
ஆண்டுப் பேரவையில் ஐக்கிய மாகாண ஆட்சித் தலைவர் ஜேம்ஸ் மெஸ்தன் நேரடியாக வந்து கலந்ததுடன், மேடை மீதேறிச் சொற்பெருக்கே ஆற்றினார்! ஆனால், ஆட்சியாளர்- ஆளப்படுவோர் தொடர்பு இதுபோல நீடித்து நிலவ முடியவில்லை. ஏனெனில், ஆட்சிக் குழுவினர் முதன்முதல் எதிர் பார்த்தபடிபேரவை வெளியே பொதுமக்களிடையேயுள்ள மனக் கசப்பை மாற்ற உதவுவதாயில்லை. அது அம்மனக்கசப்புக்கு முதலில் செவி கொடுத்து, பின்பு அவர்கள் உள்ளக் குமுறலுக்குக் குரல் கொடுப்பதாயிருந்தது. ஆட்சியாளர் இதை விரைவில் உணர்ந்து கொண்டனர். பேரவையை அரசியலவையாக்கும் திட்டத்துக்குத் தூண்டுதல் தந்த ஆட்சி முதல்வர் டஃவ்வரின் பெருமகனாரே. ஆனால், அவர் ஆட்சிக் காலத்துக்குள் அவரே பேரவையை எதிர்க்கத் தொடங்கினார் என்பது மாறுதலின் தன்மையை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
ஆட்சியாளர், அவர்கள் ஆதரவாளர், பிற்போக்குக் குழுவினர் ஆகிய அனைவரும் ஒன்றுபட்டுப் பேரவை இயக்கத்தில் குறை காணவும், அதன் போக்கில் முட்டுக்கட்டை போடவும் தொடங்கினர். பேரவைப் பிரதிநிதித்துவமுடைய தன்று என்றும், மக்களின் மிகச் சிறுபான்மையோரின் ஆதரவையே அது பெற்றிருந்ததென்றும் அவர்கள் குறை காண முனைந்தார்கள். ஆங்காங்கே பலர் அது அரசத் துரோகம் உடையது என்றும் குற்றம் சாட்டினர்.
1887 லேயே பேரவையிற் கலந்து கொண்டதற்காக ஓர் அரசியற்பணியாளருக்கு ரூபாய் 20,000 நன்னடக்கைக் காப்பீடு கோரப்பட்டது. 1890ல் அரசியற் பணியாளர் பார்வையாளராகக் கூடப் பேரவைக்குச் செல்லக்கூடாதென்று சுற்றறிக்கை விடப்பட்டது. அது மட்டுமோ! 1900இல் ஆட்சி முதல்வராயிருந்த கர்ஸான் பெருமகனார், இங்கிலாந்திலுள்ள இந்தியா அமைச்சருக்கு எழுதிய கடிதமொன்றில், “பேரவை ஆதரவற்றுத் தள்ளாடி விழவிருக்கிறது. நான் இந்தியாவில் இருக்கும் நாளிலேயே அதை அமைதிகரமாக அடக்கம் செய்துவிட்டு வரவேண்டுமென்பது என் பேரவா” என்று எழுதினாராம்!
அந்தோ! கர்ஸான் பெருமகனாரின் பேரவா, சிறிதளவும் நிறைவேறவில்லை. பேரவை தள்ளாடி வீழ்வதற்கு மாறாகப் பன்மடங்கு அவர் ஆட்சிக்குள்ளேயே வளர்ந்தது! அதை