பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

அப்பாத்துரையம் - 12

4. முந்தின ஆண்டுப் பணியை ஆராயவும் அடுத்த ஆண்டுக்கான திட்டம் வகுக்கவும் பேரவை உதவும்.

ம்

முதற்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒன்பது. ஆண்டுதோறும் இறுதித் தீர்மானம் அடுத்த ஆண்டுக் கூட்டத்தின் தேதி, இடம் ஆகியவை பற்றியது. மற்றத் தீர்மானங்களுள் முதல் மூன்று தீர்மானங்களும் இந்தியாவின் ஆட்சிமுறையைப் பற்றிப் பரிசீலனை செய்ய ஆட்சியாளர் ஒரு குழு அமைக்க வேண்டுமென்றும், பிரிட்டனிலுள்ள இந்திய அமைச்சரின் அவை கலைக்கப்பட வேண்டுமென்றும், தேர்வுரிமையுள்ள சட்டமன்றங்கள் மூலம் பொறுப்பாட்சி வழங்கப்பட வேண்டுமென்றும் கோரின.

மூன்று தீர்மானங்களும், சிறப்பாக மூன்றாவது தீர்மானமும், ஆண்டுதோறும் திரும்பத் திரும்ப வற்புறுத்தப்பட்டன. ஆயினும், 1-ஆம், 3-ஆம் தீர்மானங்கள் (ஆட்சி முறையைப் பரிசீலனை செய்யக் குழு அமைக்க வேண்டுமென்பதும், தேர்வுரிமையுள்ள சட்ட மன்றங்கள் வேண்டுமென்பதும்) 1907 வரை கவனிக்கப் படவே இல்லை. அவ்வாண்டு முதல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பரிசீலனைக் குழு அமைக்கப்பட்டு, மிகச் சிறு சிறு அளவில் சீர்திருத்தங்கள் வழங்கப்பட்டன.

இரண்டாவது தீர்மானம் இந்தியா அமைச்சர் ஆலோசனைக் குழுவை ஒழிக்க வேண்டுமென்று கோரிற்று.1913 வரை பேரவை இதனை எத்தனையோ முறை வற்புறுத்தியும், ஆட்சியாளர் அசையவில்லை. அதன் பின்பு அக்குழுவை ஒழிப்பதற்குப் பதிலாக, அதில் சில மாறுதல்களேனும் செய்ய வேண்டுமென்பது தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அவ்வகையில் வட்ட மேஜை மகாநாடு (1930) வரை ஒரு சிறு மாற்றமும் செய்ய ஆட்சியாளர் இணங்கவில்லை. அதன் பின்னும் மாநில விடுதலை ஒன்றினாலேயே இந்திய அமைச்சர் நிலையத்துக்கும் அவர் அவைக்கும் ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டது.

நான்காவது தீர்மானம், இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உச்சப்பணிகளுக்கான போட்டித் தேர்தலை ஒரே சமயத்தில் நடத்த வேண்டுமென்றும், உயர்தர நடுத்தரப் பள்ளிக் கல்வியைப் பரப்ப வேண்டுமென்றும் கோரிற்று. இரண்டாவது பேரவை, இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஒரு துணைக்குழுவை